Thupparivaalan 2; துப்பறிவாளன் 2 படத்தின் போது விஷாலுக்கும், தனக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து இயக்குநர் மிஷ்கின் கண்ணாமூச்சி வெப் சீரிஸ் திரையிட்ட நிகழ்ச்சியின் போது தெளிவாக விளக்கியுள்ளார்.
Mysskin; கடந்த ஓராண்டு காலமாக ஒரு கதை யோசித்து எழுதினேன். ஒவ்வொரு கதையுன் கிளைமேக்ஸ் காட்சி எழுதும் போது கஷ்டம், சோதனை மேல் சோதனை என்று பல இன்னல்கள் இருந்தது.
அப்படித்தான் நான் உண்மையாகவே எனது சகோதரன் என்று நம்பிய விஷாலுக்கு (Vishal) துப்பறிவாளன் 2 (Thupparivaalan 2)கதை எழுதினேன்.
ஒட்டுமொத்த தமிழ் சமூகமும், அந்த சகோதரனை மோசமாக பேசும் பொழுதும், பார்க்கும் பொழுதும், என் தோளில் சுமந்து கொண்டு அவனை நான் எனது சகோதரனாக பாவித்தேன்.
எனது உடன் பிறப்புக்குக் கூட அவ்வளவு அன்பு செலுத்தவில்லை. அவன் மீது அவ்வளவு அன்பு காட்டி துப்பறிவாளன் 2 கதை தயார் செய்தேன். 2018 ஆம் ஆண்டு துப்பறிவாளன் வெளியாகிறது.
துப்பறிவாளன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் போது ஸ்டிரைக் நடந்தது. அப்போது 3 உதவி இயக்குநர்களை வைத்து 6,7 நாட்கள் நான் மட்டுமே தனியாக படப்பிடிப்பு நடத்தினேன்.
கடைசி நாளின் போது கையில் பட்ஜெட் இல்லை. 4 நாட்கள் எடுக்க வேண்டிய சண்டைக் காட்சியை வெறும் 6 மணிநேரத்தில் எடுத்துக் கொண்டு அந்தப் படம் ரிலீஸ் ஆனது.
மிகப்பெரிய வெற்றியும் அடைந்தது. அதற்கு முன்னதாக வந்த விஷாலின் 3 படங்களுமே தோல்விகண்டது. துப்பறிவாளன் படத்திற்காக எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.3 கோடி.
ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு என்னிடம் வந்து கதை எழுத சொன்னான் விஷால். இல்லைடா, உனக்கு நிறைய கடன் இருக்கிறது. ஆதலால், அந்தப் படம் தமிழில் மட்டுமல்லாமல், பேன் இந்தியன் (Pan Indian) படமாக இருக்கணும்.
அப்படி ஒரு கதை எழுதலாம் என்று நினைத்து கோகினூர் வைரம் பற்றி ஒரு கதை எழுதுகிறேன். அது ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா ஆகிய இடங்களில் வரவேற்பு கொடுக்கும்.
அப்படியிருந்தால், கோகினூர் வைரத்திற்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. ஆகையால், அந்த கதை உனக்கு பொருத்தமாக இருக்கும்.
உன்னால், கிட்டத்தட்ட 15 இடங்களில் நல்ல வரவேற்பு கொடுக்க முடியும். வேறு வேறு மாநிலங்களில் கூட நீ டப்பிங் செய்யலாம் என்றேன்.
கதை எழுதி முடித்த பிறகு பாப்பி என்ற ஒரு தயாரிப்பாளர் கதை பிடித்துப் போக இதனை நாங்களே தயாரிக்கிறோம் என்று சொல்லி எனக்கு ஒரு அட்வான்ஸ் தொகையும் கொடுத்தாங்க.
அந்த கதையை விஷாலிடம் சொன்னேன். அதனை கேட்டப்பிறகு கட்டிப்பிடித்து அழுதான். அதன் பிறகு இந்தக் கதை எனக்குப் போதும். இதனை வைத்து எனக்குரிய எல்லா கடன்களையும் நான் அடைத்துவிடுவேன் என்றான்.
மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த பாப்பி என்ற தயாரிப்பாளர் வேண்டாம் நானே தயாரிக்கிறேன் என்றான். அப்போதுதான் எனக்கு உண்மையான தலைவலி ஆரம்பித்தது.
இந்தப் படத்திற்கு ரூ.19 முதல் ரூ.20 கோடி வரையில் செலவாகும். இதை உன்னால் பண்ண முடியாது. இன்னும் 2 மாதத்தில் ஆக்ஷன் படம் வெளியாகிறது.
ஒருவேலை அந்தப் படம் சரிவர ஓடவில்லை என்றால், இன்னும் அதிக பாரம் உன்மீது வரும் என்றேன். இல்லை, சார் இந்தப் படத்தை நானே பண்ணுறேன் என்றேன்.
அதற்கு ஒரு யோசனையும் சொன்னேன். இதை வேண்டுமென்றால், துப்பறிவாளன் 3ம் பாகமாக வைத்துக் கொள்வோம்.
துப்பறிவாளன் 2 படத்திற்கு சென்னையில் நடப்பது போன்று ரூ.10 கோடியில் கதை எழுதுகிறேன் என்று நான் சொன்னேன்.
இல்லை இந்தப் படத்தைத் தான் நீங்க பண்ணனும் என்றான். இந்த கதை எழுதி, இங்கிலாந்துக்கு சென்று லோகேஷன் பார்த்து எழுது வேண்டும் என்று அங்கே சென்றேன்.
அப்போது ஸ்கிரிப்ட் எழுதுவதற்காக நான் கேட்ட பணம் ரூ.7.50 லட்சம் மட்டுமே. அதில் நான் செலவு செய்தது ரூ.7 லட்சம்.
ஆனால், திரைக்கதை எழுதுவதற்கு மட்டும் ரூ.35 லட்சம் நான் செலவு செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகிறது. நான் இயக்குநர் மட்டுமல்ல, ஒரு தயாரிப்பாளரும் கூட.
அப்படியிருக்கும் போது ஒரு தயாரிப்பாளராக கதை எழுதுவதற்கு மட்டும் ஒருவன் ரூ.35 லட்சம் செலவு செய்தால், அவன் படம் இயக்குவதற்கு தகுதி இல்லாதவன் என்று நான் சொல்வேன்.
எனக்கு போரெக்ஸ் கார்டு கொடுத்தான். அந்த கார்டில்தான் அவன் காசு போட்டான். நான் செலவு செய்ததாக கூறப்படுவது ரூ.35 லட்சம் என்று அவன் நிரூபிக்க வேண்டும்.
பத்திரிக்கையாளர்கள் நீங்கள் அதை கேட்க வேண்டும். அதன் பிறகு ரூ.13 கோடி வரையில் இதுவரை நான் செலவு செய்ததாக அவன் கூறுகிறான்.
நான் 32 நாட்கள் படப்பிடிப்பு செய்துள்ளேன். ஒரு நாளை நான் 15 லட்சம் செலவிட்டதாகவும் அவன் குறிப்பிட்டான்.
அப்படியிருந்தால், (32*15) ரூ.4.50 கோடி. அதில் இன்னமும் ரூ.1.5 கோடி சேர்த்தால் ரூ.6 கோடி, இன்னமும் ரூ.2 கோடி என்றால் ரூ.8 கோடி இல்லையென்றால் மொத்தமாக ரூ.4 கோடி என்று பார்த்தால் ரூ.10 கோடிதான் மொத்தமே.
ஆனால், ரூ.13 கோடி என்கிறான். அதையும் அவன் நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்கு சென்று படம் எடுக்க வேண்டுமென்றால், உங்களது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக எடுக்க முடியாது.
ஆதலால், வேறொரு தயாரிப்பு நிறுவனம் வேண்டும். அதற்காக புதிய கம்பெனி வேண்டும். அப்படி தொடங்கப்பட்டதுதான் புட்லூர் அம்மன் என்ற கம்பெனி.
புட்லூர் அம்மன் கம்பெனி ஒயிட்டில் மட்டுமே அந்தப் பணத்தை கையாள முடியும். புட்லூர் அம்மன் கம்பெனிக்கு விஷால் பிலிம் பேக்டரியிலிருந்து எவ்வளவு பணம் சென்றது என்று நீங்கள் கேட்டு அதனை மக்களிடம் நீங்களே சொல்லுங்கள்.
ஒவ்வொரு இடத்திலும் நான் அவமதிக்கப்பட்டேன். எனது தாயை வேசி என்று திட்டினான். எனது சகோதரனை அடித்தான்.
எந்த தயாரிப்பாளரும் எனக்கு படம் கொடுக்கக் கூடாது என்று அவன் சொல்கிறான். இவன் ஒரு தயாரிப்பாளரின் மகன். ஆனால், நான் ஒரு ஏழை டெய்லர் வீட்டில் பிறந்தேன்.
எனது அப்பா ஒரு டெய்லர். கையில் ஒரு பேப்பரும், பென்சிலும் எடுத்துக்கொண்டு இதே ஜி5 நிறுவனத்திடம் சென்று கேட்டால் எனக்கு ஒரு கதை கொடுப்பார்கள்.
இல்லையா, ஏதோ ஒரு இன்ஸ்டியூட்டிற்கு சென்று பாடம் எடுத்த வேண்டுமானாலும் என்னால் முடியும். இல்லையென்றால் ஹோட்டலிலும் வேலை பார்க்க முடியும்.
அதுவும் இல்லையா, ரோட்டில் நின்று பாடி, கதை சொல்லி ரூ.10 சம்பாதிக்க முடியும். யாரிடமும் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எனது படங்கள் நான் யார் என்று சொல்லும்.
சாசு படத்தில் வ்ஒரு பேயை தேவதையாக காட்டியவன் நான். சைக்கோவில் 14 கொலைகள் செய்தவனையும் மன்னிக்கலாம் என்று சொன்னவன் நான்.
என்னுடைய படங்களில் என்னைப் பற்றிய அறம் இருக்கும். நீ என்னைப் பற்றி கெட்டவன் என்று சொல்லத்தேவையில்லை. சமூகத்திற்கு தெரியும்.
இன்னும், 25 வருடங்களுக்கு எனது படங்களில் இருக்கும் அறம் என்னைப் பற்றி சொல்லும். 32 நாட்கள் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு எடுத்திருக்கிறேன். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன் தினம் தான் வந்தது. யாராவது கேட்டீர்களா?
கிட்டத்தட்ட 10 நாட்கள் எனது அலுவலகத்திற்கு வந்து அந்த ஸ்க்ரிப்டை திருப்பிக்கொடு என்ஓசி கொடு என்று கெஞ்சினார்கள்.
அறத்தோடு வாழும் எனது தம்பி சொன்னான் எடுத்துக்கொடுத்துவிடுங்கள் என்று, நான் கொடுக்காமல் நேராக தயாரிப்பாளர்கள் கவுன்சில், இயக்குநர்கள் கவுன்சிலுக்கு சென்றிருந்தால் இன்று போஸ்டர் வந்திருக்குமா?
ஒரு வருடம் யோசித்து 8 மாதம் எழுதி ஒரு மாதம் பின்னாடி இருந்து ரத்தம் வரும் அளவிற்கு உட்கார்ந்து எழுதிய அந்த கதையை 32 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி அவனுக்கு என்ஓசியும் கொடுத்த பிறகு என்னைப் பற்றி தவறாக பேசுகிறான்.
உன்னால் ஒரு கதை எழுத முடியுமா? சக்ரா படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநரை அழைத்து வந்து என்னிடம் கதை சொல்லச் சொன்னான்.
இல்லை சார் அவனது கதை சரியில்லை. ஆதலால் நீங்கள் சொல்லுங்கள் என்று என்னிடம் கூறுகிறான். ஆனால், அந்த இயக்குநர் வந்து என்னிடம் கதை சொல்கிறான்.
தந்தைக்கு கிடைத்த பரம் வீர் சக்ரா விருதை தேடிப்போகும் ஒரு மகனின் கதை. அதிலிருந்து அவனுக்கு நான் கதை மாத்தி சொல்லி, சக்ரா என்று டைட்டில் வைக்கப்பட்டது.
டேவிட் மாமெட், ஜோசெஃப் கேம்பிள் ஆகியோரைப் பற்றி அவனுக்கு தெரியுமா? அவன் ஒரு பொறிக்கி. அவனைப் பற்றி சமூகத்திற்கு தெரியும். 9 மணிக்கு தேர்தலில் நாமினேசன் செய்கிறான். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இவன் செய்தது தெரியாதா?
என்னை அழைத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிற்க வைத்து தாணுவை தவறாக பேசச் சொன்னான். என்னை அண்ணன் என்று அழைத்ததால் நான் அவனுடன் சென்றேன்.
உன் அப்பா, அம்மா, சகோதரி ஆகியோர் சொல்வார்கள். நான் எப்படி உன்னிடம் பழகியிருக்கிறேன் என்று. ரமணாவும், நந்தாவும் உன்னை ரோட்டில் கொண்டு வந்து இறக்கிவிடுவார்கள் என்று அவனிடம் சொன்னேன்.
அதே சத்தியவாக்காகவும் மாறியது. ஒன்றரை வருடத்திற்கு அதே சம்பளத்தை கேட்குறாயாடா…? எனக்கு வந்து துப்பறிவாளன் ஓடவில்லை.
கதை பிடித்ததால் தான் துப்பறிவாளன் 2 எடுப்பதாகவும் என்னிடம் சொன்னான். சரி, சைக்கோ ஓடிய பிறகு எனக்கு ரூ.5 கோடி கொடு என்றேன்.
அதற்கு அவன் சொல்கிறான் சைக்கோ ஓடவில்லை. நீங்கள் தான் ஓடியதாக கூறுகிறீர்கள் என்றான். இனிமேலும், உன்னிடம் பேச முடியாது என்று எண்ணி நான் வெளியில் வந்துவிட்டேன்.
ஆனால், அவன் எனது அம்மாவை தவறான வார்த்தையால் திட்டினான். இதைவிட சொல்லக்கூடாத வார்த்தையால் எனது அம்மாவை திட்டினான்.
இதை நான் பத்திரிக்கையில் தெரிவிக்கவில்லை. ஏனென்றால், 3 வருடம் என்னை அண்ணா என்று கூப்பிட்டதற்காக மட்டும். தமிழகத்தில் நான் ஒருத்தன் தான் அவனை பத்திரமாக பார்த்துக்கொண்டேன்.
இனி, நான் ஒருத்தன் தான் அவனிடமிருந்து தமிழ்நாட்டை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இது தமிழனோட கோபம்.
இதுவரை ஏன் நான் பொறுத்துக்கொண்டேன் தெரியுமா?
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
என்று எனது தாத்தன் சொல்லியிருக்கிறான். அதனால்,தான் நான் பொறுமையாக இருந்தேன். இனி அப்படியில்லை.
டே, தம்பி விஷால், இனிமேல் நீ தூங்கவே மாட்ட. உன்னிடம் தர்மம் இருந்தால் வாடா குருசேத்திர போருக்கு என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.