Home சினிமா கோலிவுட் சூர்யாவிற்கு நம்பிக்கை துரோகம் செய்தாரா பாண்டிராஜ்?

சூர்யாவிற்கு நம்பிக்கை துரோகம் செய்தாரா பாண்டிராஜ்?

481
0
சூர்யாவிற்கு நம்பிக்கை துரோகம்

சூர்யாவிற்கு நம்பிக்கை துரோகம் செய்தாரா பாண்டிராஜ்?

தமிழ் சினிமாவின் கேரண்டி இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றவர் இயக்குனர் பாண்டிராஜ். இவருடைய படங்கள் அனைத்தும் நஷ்டம் இல்லாமல் தப்பித்துக்கொள்ளும்.

பசங்க படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார் பாண்டிராஜ். தன்னுடைய மூன்றாவது படம் மெரினாவில் சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்தார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் சிவகார்த்திகேயன் மீண்டும் ஹீரோவாக நடித்தார். அதற்கு அடுத்தும் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க பாண்டிராஜ் முடிவு செய்தார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின்போதே இதற்காக ஒப்பந்தமும் செய்துகொண்டார். ஆனால் அதன்பிறகு சிவகார்த்திகேயன் மார்க்கெட் உயர்ந்துவிட்டது.

இதனால் கோடியில் சம்பளம் வேண்டும் என சிவகார்த்திகேயன் கேட்க பாண்டிராஜ் முடியாது எனக்கூறிவிட்டார்.

அறிமுகப்படுத்திய இயக்குனர் என்றுகூடப் பாராமல் சிவகார்த்திகேயனும் முடியாது எனக் கூறிவிட்டார்.

இதனால் அக்ரிமெண்டை கிழித்துவிட்டு, இனிமேல் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கமாட்டேன் என சில வருடங்கள் முன்பு பாண்டிராஜ் கூறினார்.

அதற்கு அடுத்து பாண்டிராஜுக்கு வாய்ப்பளித்தவர் நடிகர் சூர்யா. பசங்க 2 படத்தை சூர்யாவும், பாண்டிராஜும் இணைந்தே தயாரித்தனர்.

மீண்டும் கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சூர்யா-பாண்டிராஜ் இணைந்தனர். இதையடுத்து சூர்யாவிடம் ஒரு கதை சொல்லியுள்ளார்.

சூர்யா பிஸியாக நடித்துக்கொண்டு இருப்பதால் தம்பி கார்த்தியை வைத்தே மீண்டும் படம் இயக்க கூறியுள்ளார்.

இதற்கு இடையில் சன்பிக்சரிடம் சிவகார்த்திகேயன் கால்சீட் உள்ளது. சிவாகார்த்திகேயனை வைத்து இயக்க பாண்டிராஜுக்கு ஒரு மிகப்பெரிய தொகை சம்பளமாகப் பேசப்பட்டு உள்ளது.

உடனே பழைய பகையை மறந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி சேர்ந்துவிட்டார் பாண்டிராஜ்.

கார்த்தி, சூர்யா இதனால் பாண்டிராஜ் மீது செம்ம கடுப்பில் உள்ளனர் எனத் தகவல் வெளியானது. ஆனால், உண்மையில் கார்த்திக் நான்கு படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

மணிரத்ணமும் கார்த்தியிடம் அதிக நாள் கால்சீட் கேட்டுள்ளார். எனவே இப்படங்கள் முடிந்தவுடன் பண்டிராஜ்-கார்த்தி கூட்டணி மீண்டும் இணைய உள்ளனராம்.

Previous articleடி20 தொடரை சமன் செய்யுமா இந்தியா: ஆமை வேக தோனி
Next article50 நாட்களுக்கு சார்ஜ் நிற்கும் திறன்: புதிய ஸ்மார்ட்ஃபோன்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here