Parvati Nair Donation; தல அஜித்தைப் போன்றே உதவிய என்னை அறிந்தால் பார்வதி நாயர்! என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்த பார்வதி நாயர் அஜித்தைப் போன்றே கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார்.
அஜித்தைப் போன்றே நடிகை பார்வதி நாயர் கொரோனா பாதிப்புக்கு உதவியுள்ளார்.
நடிகை பார்வதி நாயர் கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஜித் எப்படி உதவி செய்தாரோ அதே போன்று உதவி செய்துள்ளார்.
தல அஜித் நடிப்பில் வந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு மனைவியாக பார்வதி நாயர் நடித்திருந்தார்.
என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமான பார்வதி நாயர் தற்போது அஜித்தைப் போன்றே உதவிகளும் செய்து மேலும், பிரபலமடைந்துள்ளார்.
கொரோனா பாதித்தவர்களுக்கு திரை உலகில் இருந்து பல்வேறு நடிகர், நடிகையர்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர்.
கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உதவும் வகையில், பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் இதுவரை எந்த ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் நடிகர் அஜித் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளார்.
50 லட்சம் ரூபாய் பிரதமர் நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் தமிழக முதலமைச்சர் நிதிக்கும், 25 லட்சத்தை பெப்சி தொழிலாளர்களுக்கும் அனுப்பி உள்ளார்.
வெறுமனே என்று இல்லாமல் இந்தியா, தமிழகம், திரைக்கலைஞர்கள் வரை உதவி செய்து நெஞ்சை உருக வைத்துள்ளார் தல அஜித்.
இந்த நிலையில், அஜித்தைப் போன்றே என்னை அறிந்தால் படத்தில் நடித்த பார்வதி நாயரும் உதவி செய்துள்ளார்.
பிரதமர் நிவாரண் நிதிக்கு ரூ.1 லட்சம், தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1500 அரிசி மூட்டைகள் மற்றும் சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு 1000 அரிசி மூட்டைகள் வீதம் கொடுத்து உதவியுள்ளார்.
பார்வதி நாயரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.
Parvati Nair Donates Rs 2 Lakhs to Corona Relief Fund and 1500 Rice Bags to FEFSI and 1000 to Reporters Union…