ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்த ஹரிஹரன் பர்த்டே டுடே! கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த பின்னணி பாடகர் ஹரிஹரன் இன்று தனது 65ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பின்னணி பாடகர் ஹரிஹரன் இன்று தனது 65ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்த 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் பிறந்தவர் பின்னணி பாடகர் ஹரிஹரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் ரோஜா என்ற படத்தில் தமிழா தமிழா நாளை என்ற பாடல் பாடினார்.
ரோஜா படம் ஏ. ஆர். ரகுமானுக்கும் அறிமுகப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கசல் பாடல்களைப் பாடுவதில் தேர்ச்சி பெற்ற ஹரிஹரன், கலோனியல் கசினிஸ் என்ற இசைக் குழுவின் உறுப்பினர். கடந்த 2004 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும், 2 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.
ஹரிஹரன் வென்னிலவே வென்னிலவே, முதல் மழை, பாடல், குறுக்கு சிறுத்தவலே, உதயா உதயா, சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் என்று எத்தனையோ பாடல்களை பாடியுள்ளார்.
இந்த நிலையில், இன்று தனது 65 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள் பலரும் ஹரிஹரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் நியூஸ் வெப்சைட் மூலம் நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்.
ஹேப்பி பர்த்டே ஹரிஹரன் சார்….