Home சினிமா கோலிவுட் பொன் மாணிக்கவேல் ரிலீஸ் ஒத்திவைப்பு!

பொன் மாணிக்கவேல் ரிலீஸ் ஒத்திவைப்பு!

327
0
Pon Manickavel Release PostPoned

Pon Manickavel; பொன் மாணிக்கவேல் இன்று வெளியாக இருந்த நிலையில், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொன் மாணிக்கவேல் (Pon Manickavel) படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொன் மாணிக்கவேல்

முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் பொன் மாணிக்கவேல்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் பிரபு தேவா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

மேலும், இது பிரபு தேவாவின் 50 ஆவது படம். அதனால், இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், பொன் மாணிக்கவேல் (Pon Manickavel) படம் இன்று வெளியாகயிருந்தது. இதன் காரணமாக, விளம்பரங்களும், புரோமோஷன்களும் விறுவிறுப்பாகவே நடந்தது.

Pon Manickavel Release Postponed

எனினும், இறுதியில், பணப்பிரச்சனை காரணமாக பொன் மாணிக்கவேல் வெளியாகவில்லை.

பொன் மாணிக்கவேல் வெளியாகாததால், படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்படும். இன்று மாலை கூட வெளியாகலாம்.

கடந்தாண்டு பிரபு தேவா (Prabhu Deva) நடிப்பில் தேவி 2, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்கள் வெளியாகியது. தற்போது தேள், ஊமை விழிகள், பாகீரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் வந்த தபாங் 3 படத்தை பிரபு தேவா இயக்கியிருந்தார். அண்மையில், திரைக்கு வந்த இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் ராதே படத்தை இயக்கி வருகிறார்.

பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல் வெளியாகாத போதிலும், ஜிப்ஸி, வெல்வெட் நகரம், எட்டுத்திக்கும் பற, காலேஜ் குமார், இம்சை அரசி, இந்த நிலை மாறும், முரட்டு சிங்கம், ஈவர் கரவாது ஆகிய படங்கள் இன்று திரைக்கு வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleபெர்செவரென்ஸ் ரோவர் மெஷின்; நாசாவின் மார்ஸ் 2020ன் புதிய பெயர்
Next articleTakkar: டக்கர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here