Home சினிமா கோலிவுட் போச்சா? பின்வாங்கிய அண்ணாத்த: ரிலீஸ் தேதி மாற்றம்?

போச்சா? பின்வாங்கிய அண்ணாத்த: ரிலீஸ் தேதி மாற்றம்?

236
0
Annatthe Shooting Postponed

Annaatthe; போச்சா? பின்வாங்கிய அண்ணாத்த: ரிலீஸ் தேதி மாற்றம்? ரஜினியின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தர்பார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அண்ணாத்த. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார்.

அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

குடும்ப கதையை மையப்படுத்திய படமாக அண்ணாத்த உருவாக்கப்பட்டு வருகிறது. முதலில் இந்தப் படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அண்ணாத்த படக்குழுவினரின் பாதுகாப்பு கருதி, படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, இந்த வருடத்தில் படப்பிடிப்பு முடியும் என்ற நிலையில், இருந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த அண்ணாத்த படம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக, கொரோனா முற்றிலும் சரியான பிறகே வலிமை படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று தல அஜித் தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleடுவிட்டரில் டிரெண்டாகும் #ஒரேதலைவன்_விஜய் ஹேஷ்டேக்!
Next articleவிஜய்யை தொடர்ந்து பாசமான பிள்ளைகளுக்கு வேண்டுகோள் வைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here