Ramya Pandian; சூர்யா படத்தில் ரம்யா பாண்டியன்! சூர்யா படத்தில் நடிக்க இருப்பதாக ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சூர்யா படத்தில் ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.
இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் வந்த ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்னதாக டம்மி டப்பாசு என்ற படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனியுடன் இணைந்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார்.
அதன் பிறகு போதுமான படவாய்ப்பு இல்லாததால், தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தார்.
அப்போது தான், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெள்ளித்திரையை இந்நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களின் அன்பையும் வரவேற்பையும் பெற்றார்.
மேலும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது கொரோனா காரணமாக வீட்டிலேயே இருக்கும் ரம்யா பாண்டியன் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது,
அப்போது அவர் நடிக்க இருக்கும் புதிய படங்கள் குறித்த கேள்வியை ரசிகர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், சிவிகுமார் நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டதும், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.