சிகப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்களுக்கான கட்டுப்பாடுகள் மாற்றங்களுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிகப்பு பச்சை ஆரஞ்சு மண்டலங்கள் என கொரோனா தொற்றின் பாதிப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா: சீனாவின் வுஹான் மாநிலத்தில் பரவத் துவங்கி இன்று உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா எனப்படும் கோவிட்-19 பெருந்தொற்று இதுவரை இந்த நோய்க்கு சரியான சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
பொதுத் தளர்வுகள்
இந்த ஊரடங்கு காலத்தில் விவசாயம் சார்ந்த பணிகள், வேளாண்பணிகள் அனைத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விமானம், ரயில், மெட்ரோ, பள்ளி-கல்லூரிகள் தியேட்டர்கள், ரெஸ்டாரண்டுகள் ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவைகளுக்கு அனுமதியில்லை
இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வரத்தடை.
மேலும் மருத்துவ தேவை தவிர கர்பிணிகள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வெளியே வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் அனைத்து வகை தொழிற்ச்சாலைகளும் இயங்கலாம்.
ஊராக பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பச்சை மண்டலத்தில் சிறப்பு தளர்வுகள்
கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்களில் பனிமலைகளில் உள்ள பேருந்துகளில் 50% பேருந்துகள் மட்டுமே 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கார்களில் அத்தியாவசிய தேவைக்கு 3 பேர் மட்டுமே பயணிக்கலாம்.
ஆரஞ்சு மண்டல தளர்வுகள்
ஆரஞ்சு மண்டலத்தில் கார்களில் அவசர தேவைக்காக செல்வோர் இருவர் மட்டுமே (ஓட்டுநர் மற்றும் பின் இருக்கையில்) செல்ல அனுமதி. இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி.
சிவப்பு மண்டலம்
சிவப்பு மண்டலங்களில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் சலூன் கடைகள், ஸ்பாக்கள் திறக்கக்கூடாது. ஏற்கனவே உள்ளது போலவே ஆட்டோக்கள் சைக்கிள் ரிக்ஸா டாக்சிகள் பேருந்துகள் இயங்கக் கூடாது.
தனித்தனி கடைகள் குடியிருப்பை ஒட்டியுள்ள கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தனது செய்தியில் வெளியிட்டுள்ளது.