நியூடெல்லி: இந்திய தொழில்நுட்ப கழகம்(IIT), ஹைதராபாத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு 20 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தனர்.
புதிய முறையிலான பரிசோதனை
தற்போது பயண்படுத்தப்படும் ரிவர்ஸ் ட்ரான்ஸ்கிரிப்சன் பாலிமெரேஸ் செயின் ரியாக்சன் (RT-PCR) என்னும் முறைப்படி அல்லாமல் புதிய முறைப்படி இந்த பரிசோதனை செய்யப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
விலை குறைவு
சோதனை செய்யும் கருவியின் விலை ரூ.550 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் இந்த கருவிகளை தயாரிக்கும் பொழுது இதன் விலை ரூ. 350 ஆக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
எங்கும் எடுத்து செல்லும் வகையில் புதிய கண்டுபிடிப்பு
“இந்த குறைந்த விலையிலான பரிசோதனை கருவியை சுலபமாக எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று பரிசோதனை செய்யலாம். தற்போது பயண்படுத்தப்பட்டு வரும் சோதனை முறைக்கு மாற்றாக இந்த புதிய பரிசோதனை முறையை பயண்படுத்தலாம்.” என ஆய்வாளர்களின் 3 பேர் கொண்ட குழுவை வழிநடத்தும் சிங் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனை கருவியுடன் வந்த இரண்டாவது கல்வி கழகமாக இந்திய தொழில்நுட்ப கழகம்(IIT), ஹைதராபாத் கருதப்படுகிறது.