இனிமே ரத்த கொதிப்பை ( B.P ) சரிபார்க்க சாம்சங் காலக்ஸி வாட்ச் ( Samsung Galaxy Watch ) காட்டினாலே போதும் !
நம் வாழ்க்கையே மிகவும் ஸ்மார்ட் ஆகிவிட்டது ! போன், டிவி, ரேடியோ , வாட்ச் என அனைத்தும் படு ஸ்மார்ட். முதலில் தொலைபேசி அழைப்பு வந்தால் நாம் சாதாரண போனில் பேசினோம்.
பிறகு செல்லுலார் , ஸ்மார்ட் போன் என வளர்ந்து தற்போது கைக்கடிகாரத்திலே போன் பேசும் அளவு வளர்ந்து முன்னேறிக்கொண்டே செல்கிறோம்.
ஸ்மார்ட் வாட்ச்களில் இதுவரை இதயத்துடிப்பு, நடந்த தூரம், கலோரி அளவு, போன்ற சிலவிஷயங்களை மட்டுமே அறிய முடிந்தது!
ஆனால் சாம்சங் காலக்ஸி வாட்சுகளில் இனி ரத்த கொதிப்பின் அளவுகளை அதி துல்லியமாக அறிய முடியும். கடந்த சில நாட்களாகவே இதற்கான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்த சாம்சங், தற்போது அதை பரிசோதித்து விட்டதாகவும், மேலும் சில மாறுதல்களை செய்து சந்தைப் படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அநேகமாக இந்த அதிசிய கைக்கடிகாரம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சந்தைக்கு வரலாம்.
இந்த வாட்ச் ஒரு சென்சாருடன் இணைந்து செயல்பட்டு இருதய துடிப்பை மூலமாக கொண்டு நமது ரத்த அழுத்தத்தை கணக்கிடும், இதனுடைய சிறந்த செயல்பாட்டிற்கு வாரம் ஒரு முறை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என சொல்ல படுகிறது.
இந்த கருவிக்கு கொரியா அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் அது அவ்வளவு எளிது அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சிலர் இந்த கருவியின் துல்லிய தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். விரைவில் அணைத்து நிலைகளையும் கடந்து ஸ்மார்ட் வாட்ச் வரும் என நம்புவோம்.
சா.ரா.