Home சினிமா கோலிவுட் புல்லட்டை ஓட்டத் தெரியாமல் ஓட்டி கீழே விழுந்த தல பட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

புல்லட்டை ஓட்டத் தெரியாமல் ஓட்டி கீழே விழுந்த தல பட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

300
0
Shraddha Srinath Bike Video

Shraddha Srinath Bike Video; புல்லட்டை ஓட்டத் தெரியாமல் ஓட்டி கீழே விழுந்த தல பட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்! நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் பைக் ஓட்டும் போது கீழே விழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ரத்தா ஸ்ரீநாத் புல்லட் ஓட்டும் போது கீழே விழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான யூடர்ன் படத்தின் மூலமாக பிரபலமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பிறகு கௌதம் கார்த்திக் நடிப்பில் வந்த இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து, விக்ரம் வேதா, கே-13, காற்று வெளியிடை போன்ற படங்களில் நடித்தார். ஆனால், எந்தப் படமும் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. அப்போதுதான் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இந்தப் படத்தில், நடித்து, ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றார். தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதுவும் தைரியமான ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். நேற்று சக்ரா படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூப்பில் புதிய சாதனை படைத்தது.

இந்த நிலையில், ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ அவர் பைக் ஓட்டும் வீடியோ. தான் பைக் ஓட்டுவதற்கு பழகி வரும் நிலையில், ஓட்டத் தெரியாமல் ஓட்டி கீழே விழுந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்திய சினிமாவில் போல்டான பெண் என்றால் பைக் ஓட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி என்று கூறி ராயல் என்ஃபீல்டு ஏன் இவ்வளவு வெயிட்டா இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.

இதில், கொடுமை என்னவென்றால், அந்த புல்லட்டில் இருந்து நான் கீழே விழுந்த போது என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை.

புல்லட்டுக்கு எந்த சேதாரமும் ஆகவில்லை என்று தான் அனைவரும் பார்த்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஹலோவில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் பைக் வீடியோ என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Shraddha Srinath

Previous articleதயாரிப்பாளர் தனஞ்செயனின் சகோதரர் கொரோனாவால் பலி!
Next articleகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்கு வெட்கப்படுகிறேன்: இயக்குநர் ஹரி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here