Home சினிமா கோலிவுட் தயாரிப்பாளர் தனஞ்செயனின் சகோதரர் கொரோனாவால் பலி!

தயாரிப்பாளர் தனஞ்செயனின் சகோதரர் கொரோனாவால் பலி!

198
0
Dhananjayan Brother Passed Away

Dhananjayan; தயாரிப்பாளர் தனஞ்செயனின் சகோதரர் கொரோனாவால் பலி! பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தரான தனஞ்செயனின் சகோதரர் கொரோனாவால் பலியாகியுள்ளார்.

தயாரிப்பாளர் தனஞ்செயனின் சகோதரர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருப்பவர் தனஞ்செயன். இவரது மூத்த சகோதரர் கொரோனாவால் பலியான சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், தயாரிப்பாளர் தனஞ்செயனின் மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 நாட்களில் தனது மூத்த சகோதரர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது மகன் மற்றும் மனைவி ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது சகோதரரின் குடும்பத்திற்கு சிகிச்சை அளிக்க உதவி செய்த தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஆகியோருக்கு தனது நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், கொரோனா தொற்றாமல் இருக்கவும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், முடிந்தவரை அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகொரோனாவிற்கு 18 மாத குழந்தை உயிரிழப்பு
Next articleபுல்லட்டை ஓட்டத் தெரியாமல் ஓட்டி கீழே விழுந்த தல பட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here