Home சினிமா கோலிவுட் 7 வருடம் உதவி இயக்குநராக இருந்த சுதா கொங்கரா பர்த்டே டுடே!

7 வருடம் உதவி இயக்குநராக இருந்த சுதா கொங்கரா பர்த்டே டுடே!

276
0
Sudha Kongara Birthday Today

Sudha Kongara: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சுதா கொங்கரா பிறந்தநாள் இன்று (Happy Birthday Sudha Kongara).

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் இருக்கும் நிலையில், அவர்களில் பெண் இயக்குநர்கள் என்றால் விரல் விட்டு எண்ணும் அளவுதான்.

அவர்களில் தன்னையும் ஒருவராக இணைத்து கொண்டுள்ளார் பெண் இயக்குநர் சுதா கொங்கரா.

கடந்த 1989 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தார் சுதா கொங்கரா (31).

மெட்ராஸ் மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் வரலாறு மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்.

படித்து முடித்த சுதா கொங்கரா இயக்குநர் மணிரத்னத்திடம் கிட்டத்தட்ட 7 வருடம் உதவி இயக்குநராகவே இருந்துள்ளார்.

முதன் முதலில் தமிழில் துரோகி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த், பூர்ணா, பூனம் பாஜ்வா ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

நண்பர்களுக்கு இடையில் மோதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இப்படத்தின் புரோடக்‌ஷன் பணியின் போது, பாக்ஸிங் தொடர்பான கதையை எழுதியுள்ளார். அப்போதே படத்திற்கு இறுதிச் சுற்று என்று டைட்டில் வைத்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இறுதிச் சுற்று படத்தில் நடிப்பதற்கு மாதவனை அணுகியுள்ளார்.

மாதவன் மற்றும் சுதா கொங்கரா இருவருக்கும் நல்ல புரிதல் இருந்துள்ளது. இருவருமே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

எப்படியென்றால், மணிரத்னம் படத்தில் உதவி இயக்குநராக சுதா கொங்கரா இருந்த போது மாதவன் நடித்துள்ளார்.

துரோகி படத்தைத் தொடர்ந்து இறுதிச் சுற்று படத்தை இயக்கினார். இப்படம் ஹிந்தியில் Saala Khadoos என்ற டைட்டிலில் வெளியானது.

இறுதிச் சுற்று படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.

இறுதிச் சுற்று படத்தை தெலுங்கில் குரு என்ற டைட்டிலில் ரீமேக் செய்துள்ளார்.

துரோகி மற்றும் இறுதிச் சுற்று படத்தைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார்.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சுதா கொங்கராவின் அவரது அர்ப்பணிப்பு படக்குழுவினரை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நடிகையாகவும் திகழ்ந்துள்ளார். ஆம், பிரசன்னா நடிப்பில் வந்த கண்ட நாள் முதல் படத்தில் கல்லூரி பேராசிரியை என்ற ரோலில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சுதா கொங்கராவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். ஹேப்பி பர்த்டே சுதா கொங்கரா மேம்…

SOURCER SIVAKUMAR
Previous article5000 ஆம் ஆண்டுக்கு டைம் ட்ராவல் செய்த நபர்
Next articleபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏன் இவ்வளவு மவுசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here