ஸ்ரீ ராம நாமத்தின் சிறப்புகள். இன்று ஸ்ரீ இராம நவமி. இராம நாமம் குறித்து சித்தர்கள் வாக்கு. ஸ்ரீ இராமசந்திரனின் நாமம் sri rama navami. sri rama navami date 2020
நமது வேத இதிகாசங்களில் பல மந்திரங்கள் இறைவனை காண கூறப்பட்டிருந்தாளும் எளியவர்களும் எளிதாக கூற இயலும் இறை சக்தி அதிகம் மிக்க ஒரே மந்திரம் “இராம நாமம்” ஒன்று மட்டுமே ஆகும்.
இதை சன்மதம் என்று கூறப்படுகின்ற ஆறு மதங்களும் ஏற்கும். யாரும் மறுக்க இயலாத ஒரு திருநாமம் உண்டெனில் ஸ்ரீ இராமசந்திரனின் நாமமே ஆகும். திருடனாய் இருந்து வால்மீகியை ஞானம் பெற செய்தது இராம நாமம் ஆகும்.
இராமனை விட இராம நாமத்திற்கு சக்தி அதிகம் என்பது அனுமனின் வாக்கு. காரணம் இராமரே கல்லை தூக்கி சமுத்திரத்தில் போட்ட போதும் கல் கடலில் மூழ்கியது.
பின் ஆனுமன் ஸ்ரீராம் என்று கல்லின் மேல் எழுதிப் போட்ட பொழுது கல்லானது மிதந்தது.
ஒரு கோடி முறை இராம நாமம் ஜெபிப்போற்கு அனுமனின் தரிசனமும் பின்பு ஸ்ரீ இராமரின் தரிசனமும் நிச்சயம் கிடைக்கும்.
துளசிதாசருக்கு முதலில் இராம நாமத்தால் அனுமனின் தரிசனம் பெற்றார் எனவும். பின்பு இராமர் தரிசனம் அனுமனின் ஆசியால் கிடைத்தது.
காஞ்சி மகா பெரியவரும் இராம நாமத்தினால் அனைத்து இன்னல்களும் நீங்கி நற்கதி அடையாளம் என்று கூறியுள்ளார்.
இராம நாமம் குறித்து சித்தர்கள் வாக்கு
சிவவாக்கிய சித்தரும் தனது சிவ வாக்கியத்தில் இராம நாமத்திற்கு ஈடாக ஒரு மந்திரம் எங்குமில்லை என்று கூறியுள்ளார்.
“அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும் சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே” -சிவ வாக்கியம்
மேலும் படிக்க..