90 களில் பிறந்தவர்களுக்கு வானிலை மையத்தின் இயக்குனர் எஸ் ஆர் ரமணன் மிகவும் பரிச்சயமானவர். மழைக்காலங்களில் இவரை காணாத தமிழ் மக்களே இல்லை.
ரமணன் ஒரு இந்திய வானிலை ஆய்வாளர். இவர் சென்னையின் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனராக பணியாற்றியவர்.
இவருடைய தமிழுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு . துளியளவும் ஆங்கிலம் கலக்காத தமிழில் தெளிவாக பேசும் காந்த குரலுக்கு சொந்தக்காரர்.
“அடுத்த 24 மணி நேரத்திற்கு…” என சொல்லி அவர் விடும் இடைவெளி செம ஸ்டைல் வேற லெவல்.
“காற்றழுத்த தாழ்வு நிலையானது வடக்கு நோக்கி நகர்ந்து …” என்று சொல்கையில் அவர் கண்களும் வடக்கு செல்லும் .
சென்னை இவருக்கு எப்போதும் மேக மூட்டத்துடன் காணப்படும்.
‘அநேக’ ‘வெப்ப சலனம்’ ‘கன..மிக கனமழை..’ என உள்ளார்ந்த வார்த்தைகளால் அனைவரின் உள்ளம் கவர்ந்தவர் .
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நவம்பர் , டிசம்பர்களின் செய்திகளில் தவறாது தலைக்காட்டும் நபர்.
90களின் மாணவர்களுக்கு பால்யத்தில் அங்கமாய் இருந்தவர். இனி டிவியில் வரமாட்டார் என 2016 இதே நாள் எண்ணுகையில் மனதின் ஓரம் ஒரு கனம்.
90களில் பிறந்த மாணவர்களுக்கு இவரால் அதிக விடுமுறை நாட்கள் கிடைத்தது உண்டு.
36 ஆண்டு காலமாக வானிலை மையத்தில் பணியாற்றி 2016 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார்.