Home சினிமா கோலிவுட் சரியான நேரத்தில் சரியான வீடியோ வெளியிட்ட சுஹாஷினி!

சரியான நேரத்தில் சரியான வீடியோ வெளியிட்ட சுஹாஷினி!

0
444
Suhasini Son Video

Suhasini Mani Ratnam; சரியான நேரத்தில் சரியான வீடியோ வெளியிட்ட சுஹாஷினி! நடிகை சுஹாசினி தனது மகன் வெளிநாட்டிலிருந்து வந்ததிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

நடிகை சுஹாசினி தனது மகன் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்து தொடர்ந்து 5ஆவது நாளாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 100 நாடுகளுக்கும் மேலாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடிகை சுஹாசினியின் மகன் லண்டனிலிருந்து திரும்பி வந்து தனியறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் இப்போது எனது மகன் நந்தன் கிட்ட பேசிக்கொண்டிருக்கிறேன். லண்டனிலிருந்து கடந்த 18 ஆம் தேதி சென்னை வந்தார். வந்ததிலிருந்து தனியறையில்தான் இருக்கிறார்.

14 நாட்கள் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு யாரிடமும் நெருங்கி பழகாமல் தூரத்தில் இருந்து அவர்களது குடும்பத்தாரிடமும் நெருங்கி பேசாமல் இருக்க வேண்டும்.

சாப்பாடு கூட ஒரு அறையில் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அப்போது கூட அவர்கள் கையை கழுவிக்கொள்வார்கள். அதன் பிறகு ஸ்ப்ரே அடிப்பார்கள், அடுத்து நான் கையை கழுவிக் கொண்டு தான் அந்த சாப்பாட்டை சாப்பிடுவேன்.

எனக்கு இப்போது வைரஸ் இல்லை. எனினும், இருப்பது போன்று உணர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். எல்லோரும் இது போன்றுதான் இருக்க வேண்டும் என்று அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here