Home Latest News Tamil சாத்தான்குளம் இருவர் இறப்பு வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற தமிழக அரசு முடிவு: எடப்பாடி பழனிச்சாமி

சாத்தான்குளம் இருவர் இறப்பு வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற தமிழக அரசு முடிவு: எடப்பாடி பழனிச்சாமி

சாத்தான்குளம் இருவர் இறப்பு வழக்கை

சேலம்: சாத்தான்குளம் இருவர் இறப்பு வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற தமிழக அரசு முடிவு. இதை முதல் அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நீதிபதிகளிடம் தெரிவிக்கப்படும்

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலில் ஒரு அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல் அமைச்சர் இந்த செய்தி அடுத்த உயர் நீதிமன்ற அமர்வில் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்படும் என கூறினார்.

சி.பி.ஐ யிடம் ஒப்படைப்போம்

“சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது நாங்கள் நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கி இவ்வழக்கை சி.பி.ஐ யிடம் ஒப்படைப்போம்,” என அவர் தெரிவித்தார்.

பி.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்

காவல் துறையின் தாக்குதல் குறித்தி எதையும் தெரிவிக்காத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துகுடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பி.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மொபைல் கடை மூடுதல் குறித்த வழக்கில் கைதானார்கள். “ இருவரும் இறப்பதற்கு முன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்கப்பட்டார்கள்,” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Previous articleவைரலாகும் தளபதி விஜய்யின் மெர்சல் படப்பிடிப்பு புகைப்படங்கள்!
Next articleதிங்கள்கிழமை வெளியாகும் “தும்பி துள்ளல்” பாடல், சியான் விக்ரமின் “கோப்ரா” , இசை ஏ.ஆர். இரகுமான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here