Home சினிமா கோலிவுட் தளபதி விஜய்யுடன் விளையாடும் பிக் பாஸ் பிரபலத்தின் மகன்: வைரலாகும் புகைப்படம்!

தளபதி விஜய்யுடன் விளையாடும் பிக் பாஸ் பிரபலத்தின் மகன்: வைரலாகும் புகைப்படம்!

293
0
Vanitha Son VijaySriHari

Thalapathy Vijay Vanitha Son Birthday; தளபதி விஜய்யுடன் விளையாடும் பிக் பாஸ் பிரபலத்தின் மகன்: வைரலாகும் புகைப்படம்! நடிகை வனிதாவின் மகன் தளபதி விஜய்யுடன் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய்யுடன் பிக் பாஸ் பிரபலம் வனிதாவின் மகன் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா. இவர், பிரபல நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியினரின் மூத்த மகள்.

சந்திரலேகா படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். எனினும், எந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை. இதையடுத்து, சினிமாவில் இருந்து விலகினார்.

இதையடுத்து, கடந்தாண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், சமீபத்தில் பீட்டர் பால் என்ற இயக்குநரை 3ஆவதாக காதல் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி வனிதா – பீட்டர் பால் ஆகியோரது திருமணம் மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே வைத்து நடக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு வனிதா வாழ்த்து தெரிவித்தார். அதோடு, விஜய்யின் 21 ஆவது பிறந்தநாளின் போது சந்திரலேகா படப்பிடிப்பு நடந்ததாகவும் அங்கு வைத்து அவரது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, தற்போது தனது மகன ஸ்ரீஹரியுடன் தளபதி விஜய் விளையாடும் புகைப்படத்தை பகிர்ந்து, விஜய்ஸ்ரீஹரி முதல் பிறந்தநாள் விழாவில் தளபதி என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஜோதிகா, கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து ஓடிடியில் ரிலீஸ் ஆகும் வரலட்சுமி படம்!
Next articleஅஜித்தின் ஐடியா வைரல்: அஜித்துக்கு நன்றி தெரிவித்த டாக்டர் கார்த்திக்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here