தம்பி திரைவிமர்சனம் (Thampi Review): பாபநாசம் படத்திற்குப் பிறகு தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கி உள்ள இரண்டாவது படம்.
அப்பா சத்யராஜ், அக்கா ஜோதிகா, தம்பி கார்த்தி இவர்கள் மூவரையும் சுற்றி நடக்கக் கூடிய கதை தான் தம்பி.
த்ரிஷ்யம் விமர்சனம் (Drishyam Review):
த்ரிஷ்யம் (பாபநாசம்) படத்தில் மகள் செய்த கொலையை மறைக்க அப்பாவான மோகன்லால் பல கில்லாடித் தனமான காரியங்களை செய்வார்.
அவரை எப்படியாவது மாட்டிவிடத் துடிக்கும் ஒரு போலீஸ். ஊர் மக்களிடம் மிகவும் நல்ல பெயர் எடுத்தவர் மோகன்லால் என…
ஒரு பக்கம் பரபரப்பு, மறுபக்கம் விறுவிறுப்பு; இன்னொரு புறம் காமெடி என நம்மை எங்குமே அசையவிடாமல் திரைக்கதையால் சீட்டிலேயே கட்டிப்போட்டு அமர வைத்திருப்பார் ஜீத்து ஜோசப்.
புல் ஸ்டாப்.. என்ன, தம்பி திரைவிமர்சனம் னு சொல்லிட்டு த்ரிஷ்யம் விமர்சனம் சொல்லிட்டு இருக்கேன்னு கேக்குறீங்களா.. விஷயம் இருக்கு..
நீங்க தம்பி படம் பாத்திருந்தா? நா என்ன சொல்லப் போறேன்னு முதல் வரியிலேயே கண்டு பிடிச்சிருப்பீங்க…
தம்பி படம் எப்படி?
ஓபன் பண்ணுனா டாப் ஆங்கிள் நான்கு லாரி ப்ளஸ் வடிவில் நிற்கிறது. ஆகா திரும்ப ஒரு லாரி கதையா என நம்ம மைண்ட தீரன், கைதி ரேஞ்சுக்கு யோசிக்க வக்கிறாரு இயக்குனர்.
அந்த லாரி சீனோட சரி.. படத்தின் கதை, இடைவேளை வரை படுத்து தூங்க வச்சிடுச்சு. காரணம், த்ரிஷ்யம் படத்தின் கதையையே வேறு கோணத்தில் கூறியுள்ளார் இயக்குனர்.
த்ரிஷ்யம் 2:
படம் முழுவதும் நாம் கதையை கண்டுபிடித்து விடக்கூடாது என பல இடங்களில் நம்மை வேண்டும் என்றே வேறுவிதமாக யோசிக்க வைத்துவிட்டு கடைசி 15 நிமிடத்தில் பரபரப்புடன் த்ரிஷ்யம் கதையை கூறிவிட்டார் இயக்குனர்.
க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் மிகவும் சுவாரஸ்யம் என்றாலும், அந்த ட்விஸ்டை கண்டுபிடித்து விடக்கூடாது என வைக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் படத்திற்கு பலவீனமாக அமைந்துவிட்டது.
கிளைமேக்ஸ் முடிஞ்சதும் எனக்கு என்ன தோனுச்சுன்னா..? சத்யராஜ் கதாப்பாத்திரத்திற்கு பதில் மோகன்லாலை பிக்ஸ் பண்ணி த்ரிஷ்யம் 2 என்று த்ரிஷ்யம் தொடர்ச்சியுடனே இப்படத்தை எடுத்து இருக்கலாம் என்று தோன்றியது! இதுல ஒன்னும் தப்பில்லையே?
இப்டி சொதப்பிட்டியே ஜீத்து:
ஆரம்பத்திலேயே கதையில் ஒரு பரபரப்பு இருந்திருந்தால் இந்த படம் வேற லெவல் படம். அந்த பரபரப்பு என்ற ஒன்று தான் இப்படத்தை சுமாரான படமாக மாற்றியுள்ளது.
தீரன், கைதி என முரட்டு ஹிட் குடுத்த ஹீரோ. மெமரிஸ், த்ரிஷ்யம் என திரைக்கதையில் கட்டிப்போட்ட இயக்குனர். இப்படி பெரிய எதிர்பார்ப்பின் உச்சத்தில் படம் பார்க்கச் சென்றேன்.
இப்டி சொதப்பிட்டியே ஜீத்து ஜோசப் நண்பா…