கோவை: தமிழ்நாடு வனத்துறை படிக்க வசதிகள் ஏற்படுத்தி கொடுத்த 16 வயது பழங்குடி இன மாணவி சீ. ஸ்ரீதேவி பத்தாம் வகுப்பில் 95% மதிப்பெண்களுடன் கேரள மாநில பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்றார்.
மாணவிக்கு கேடையம் மற்றும் பொன்ஆடை மூலம் கவுரவிப்பு
பொள்ளாச்சி ஆனைமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் இயக்குனர்எஸ். ஆரோக்கிய ராஜ் சேவியர் அந்த மாணவிக்கு கேடையம் மற்றும் பொன்ஆடை போர்த்தி கவுரவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை சரகத்தில் உள்ள பூச்சுகொட்டம்பாறை என்ற பகுதி பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
150கி.மீ தூரத்திற்கும் அதிகமாக பயணம் செய்து தேர்வுகள் எழுதினார்
இங்கு மின்சார அமைப்பு மற்றும் தொலைபேசி என எந்த வசதிகளும் கிடையாது. ஒரு மாதத்திற்கு முன் அந்த மாணவி 150கி.மீ தூரத்திற்கும் அதிகமாக பயணம் செய்தும் மற்றும் கேரள எல்லையில் உள்ள அம்மாநில பேருந்தில் ஏறி பயணம் செய்தும் பள்ளிக்கு சென்று தேர்வுகள் எழுதி வந்துள்ளார்.
வனத்துறை சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வந்தன
இவ்வாறு தொலை தூரம் சென்று படித்து வந்த பெண்ணிற்கு வனத்துறை சார்பில் தொடர்ந்து உதவிகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் தான் இந்த மாணவி அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளார், இது மிகவும் பாராட்டிற்கு உரியது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அறிவியல் துறையில் மேல் படிப்பை தொடங்க மாணவி விருப்பம்
அந்த மாணவி தனக்கு எல்லா உதவிகளையும் வனத்துறையினர் செய்து கொடுத்ததாகவும், அறிவியல் துறையில் மேல் படிப்பை தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.