Home Latest News Tamil Today Headlines – 05 Apr 2020| இன்றைய தலைப்புச் செய்திகள்| Morning Headlines

Today Headlines – 05 Apr 2020| இன்றைய தலைப்புச் செய்திகள்| Morning Headlines

383
0
Today Headlines - 05 Apr 2020

Today Headlines – 05 Apr 2020| இன்றைய தலைப்புச் செய்திகள்| Morning Headlines

Today Headlines – 05 Apr 2020 : தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 485 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இரண்டாவது உயிரிழப்பு. அவர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்த 4 மாடி கட்டிடத்தை வழங்கிய ஷாருக்கான்.

வெளியில் செல்லும்போது முககவசங்களை கட்டாயமாக்கி அனுயுங்கள் என்று தமிழக அரசு அறிவுரை.

வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 12 பேர் பலி 607 பேர் பாதிப்பு.

அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகபட்சமாக ஆயிரத்து 480 பேர் உயிரிழப்பு.

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக தொழுகையை செய்ததாக 2 பேர் மீது வழக்கு பதிவு.

சென்னையில் வாகனங்களில் போலியாக மருத்துவர்கள், பிரஸ் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு உலாவரும் இளைஞர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 58 ஆயிரத்து 480 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

டெல்லியில் உள்ள திகார் சிறையில் உள்ள கைதிகள் சுமார் 75000 முக கவசங்களை தயாரித்து இருப்பதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா சிறப்பு வார்டுகளில் உதவும் 3 சிறப்பு தானியங்கி ரோபோக்களை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

கொரோனா சோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ரயில் சேவையை தொடங்குவது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை இது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு தமிழகத்துக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மளிகைக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திறந்து ஒரு மணி வரை மட்டுமே இயங்கும்.

வேலையின்றி தவிக்கும் 25ஆயிரம் பாலிவுட் தொழிலாளர்களுக்கு சல்மான்கான் உதவினார்.

பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் 20 லட்சம் நிதி உதவி செய்தார் நடிகை நயன்தாரா.

ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை ரூபாய் 34 ஆயிரத்தை தாண்டியது.

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மீ தங்களுடைய ஸ்மார்ட்போனின் விலை அதிகரித்துள்ளது.

பிரபல கால்பந்து வீரர் நெய்மர் 7.60 கோடி நிதி உதவி வழங்கினார்.

கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக சச்சின் தோனி விராட் கோலி விஸ்வநாதன் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்களுடன் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

Previous articleயமுனா நதியா இது வியக்கும் டெல்லி மக்கள், கண்ணாடி போல் மின்னுகிறது
Next articleகுடும்பத்தோடு பார்க்க நல்ல நேரம் வந்திருச்சு: ஸ்டார் தொலைக்காட்சியில் தர்பார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here