Home சினிமா கோலிவுட் வள்ளல் தளபதி விஜய்: பெருமையோடு போற்றும் ரசிகர்கள்!

வள்ளல் தளபதி விஜய்: பெருமையோடு போற்றும் ரசிகர்கள்!

563
0
Vallal Thalapathy Vijay

Thalapathy Vijay; வள்ளல் தளபதி விஜய்: பெருமையோடு போற்றும் ரசிகர்கள்! தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வரும் விஜய்யை ரசிகர்கள் வள்ளல் தளபதி விஜய் என்ற ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

வள்ளல் தளபதி விஜய் என்ற ஹேஷ்டேக்கில் தளபதி விஜய்யை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், ரசிகர்கள் வள்ளல் தளபதி விஜய் என்ற ஹேஷ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி, பொருளுதவி என்று தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தளபதி விஜய், கொரோனா பாதித்தவர்களுக்கு ரூ.1.3 கோடி வரையில் நிதியுதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்,

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம்,

கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்,

கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தம் ரூ.20 லட்சம்),

பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் என்று நிதியுதவி அளித்துள்ளார். இதுதவிர தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு உதவுமாறும் ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதோடு, கொரோனா லாக்டவுன் காரணமாக வறுமையில் கஷ்டப்படும் ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா ரூ.5000 அனுப்பி வைத்துள்ளார். Vijay Charitable Trust மூலமாக இந்த தொகை அனுப்பப்பட்டுள்ளது.

இதனை விஜய் ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். தோடு, வள்ளல் தளபதி விஜய் என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் கொரோனா பாதிப்பு மக்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி வழங்குமாறி அறிவித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில், விஜய் ரசிகர்களுக்கு உதவியுள்ளார்.

அதோடு, இவ்வளவு லேட்டாக நிதியுதவி அளித்தாலும், அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆரம்பம் முதலே பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வந்த நிலையில், விஜய் போன்று முன்னணி நடிகர்கள் வழங்காதது அதிர்ச்சியையும், விமர்சனத்தையும் முன் வைத்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வள்ளல் தளபதி விஜய் என்ற ஹேஷ்டேக் உருவாகும் அளவிற்கு அவர் ரசிகர்களுக்கும், கொரோனா பாதிப்பு மக்களுக்கும் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleசிம்ரனின் நம்பர் கவுண்டிங்: வைரலாகும் வீடியோ!
Next articleஅந்த விஷயத்தில் என் புருஷன் கிங்; வியந்த அனுஷ்கா ஷர்மா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here