Home சினிமா கோலிவுட் தமிழ் சினிமாவின் தளபதி, விஜய்: புரிந்து கொண்ட வர்ஷா பொல்லம்மா!

தமிழ் சினிமாவின் தளபதி, விஜய்: புரிந்து கொண்ட வர்ஷா பொல்லம்மா!

352
0
Varsha Bollamma

Varsha Bollamma; தமிழ் சினிமாவின் தளபதி, விஜய்: புரிந்து கொண்ட வர்ஷா பொல்லம்மா! விஜய்யை ஏன் தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கிறார்கள் என்பதை நடிகை வர்ஷா பொல்லம்மா தற்போது புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தளபதி, விஜய் என்பதை தற்போது புரிந்து கொண்டதாக நடிகை வர்ஷா பொல்லம்மா தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வந்த 96 படத்தின் பிரபா என்ற ரோலில் நடித்தவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. அதற்கு முன்னதாக சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தில் பிரபுவிற்கு மகளாக நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இவ்வளவு ஏன், தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியில் இடம்பெற்ற காயத்ரி என்ற ரோலில் நடித்துள்ளார்.

தற்போது விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர் படம் உருவாகியுள்ளது. விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், பிகில் படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்தது பற்றியும், 96 படத்தில் விஜய் சேதுபதி கற்றுக் கொடுத்த விஷயங்கள் பற்றியும் வர்ஷா ரசிகர்களிடையே உரையாடியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் வீட்டிலே முடங்கியிருக்கும் சூழல் வந்துவிட்டது.

வீட்டில் இருக்கும் பிரபலங்கள் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில், வர்ஷாவும் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது, அவரிடம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த வர்ஷா கூறுகையில், விஜய் உடன் நடிப்பது என்பது எனக்கு கனவு. ஏன் அவரை தளபதி என்று அழைக்கிறார்கள் என்பது அவருடன் நடித்த பிறகுதான் எனக்கு புரிந்தது என்றார்.

மேலும் விஜய் சேதுபதி மிகவும் நல்ல மனிதர். அவர், 96 படத்தின் போது எனக்கு நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.

பிகில் படத்தைத் தொடர்ந்து வர்ஷா தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

SOURCER SIVAKUMAR
Previous article2ஆவது முறையாக நடிகை த்ரிஷா கொரோனா அறிவுரை!
Next article8/4/2020 ராசிபலன் : இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here