Home Latest News Tamil 4 முரட்டு ஹீரோயின்கள்; தெறிக்கவிட்ட தேவரகொண்டா!

4 முரட்டு ஹீரோயின்கள்; தெறிக்கவிட்ட தேவரகொண்டா!

5390
0

4 முரட்டு ஹீரோயின்கள்; தெறிக்கவிட்ட தேவரகொண்டா!

தமிழ்நாட்டில் காதலர்கள் மத்தியில் பிரபலமான விஜய் தேவரகொண்டாவின் அடுத்த திரைப்படம் டைரக்டர் கிரந்தி மாதவ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இவரது நடிப்பில் வெளிவந்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற ரொமான்டிக் என்கவுண்டர் படங்கள் பயங்கர ஹிட் அடித்தது.

தமிழின் முதல் நேரடிப் படமான நோட்டா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதில் ரொமான்ஸ் இல்லை. ரொமான்ஸ் இருந்தால் மட்டுமே விஜய் தேவரகொண்டாவின் படங்கள் வெற்றி பெரும்.

தற்போது நடித்துவரும்  படத்திற்கு “மல்லி மல்லி இடி ராணி ரோஜு” எனப்பெயர் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அது உண்மையல்ல. இன்னும் பெயர் ஏதும் வைக்கப்படவில்லை.

இப்படத்தில் ராசி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இசபெல்லா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர் எனப் படப்பூஜையின் போதே தெரிந்துவிட்டது.

நான்காவதாக ஒரு ஹீரோயின் இப்படத்தில் நடிக்க உள்ளார். அவர் யார் என்று தெரிந்தால் ஷாக்காகி விடுவீர்கள்.

இதுவரை மூடிக்கொண்டு நடித்த கேத்தரின் தெரசா தான். ஆனால், வந்த ராஜாவாதான் வருவேன் படத்தில் க்ளாமராக நடித்து தூள் கிளப்பினார்.

எனவே, விஜய் தேவரகொண்டாவை எல்லாம் தூக்கி சாப்பிட்டாலும் சாப்பிடுவார். வட சென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சிலேயே அதிரவைத்தார்.

4 ஹீரோயின்களுமே முரட்டுத்தனமான ஹீரோயின்கள். விஜய் தேவரகொண்டாவும் அதற்கு சளைத்தவர் அல்ல.

ஒரு ஹீரோயின் என்றாலே விஜய் தேவரகொண்டா புகுந்து விளையாடுவார். இப்போது மொத்தம் நான்கு ஹீரோயின்கள். அசரமால் நடித்து வருகின்றாராம்.

அர்ஜுன் ரெட்டியை விட மிதமிஞ்சிய காட்சிகள் எல்லாம் படத்தில் உள்ளதாம். எனவே படம் தாறுமாறு ஹிட் அடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleகௌசல்யா சும்மா இருந்தாலும், வாய் சும்மா இருக்காது போல!
Next articleஎம்மண்ணிலும், எச்சூழலிலும் இந்தியா சிம்ம சொப்பனமாக விளங்கும் – சச்சின்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here