கொரோனா பயமில்லை: விஜய் வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Vijay Master Audio Launch
மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch) வரும் 15 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், அவர் வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் செல்லும் வீடியோ, புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் விஜய் (Master Vijay)
பிகில் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.
தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மாஸ்டர் குறித்து ஒவ்வொரு நாளும் அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது.
மாஸ்டர் இசை வெளியீடு (Master Audio Launch)
அந்த வகையில், மாஸ்டர் இசை வெளியீடு வரும் 15-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, சன் டிவி நிறுவனம் மாஸ்டர் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை தங்களது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறது.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்கு கோடான கோடி ரசிகர்கள் இப்போதிலிருந்தே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், மாஸ்டர் இசை வெளியீட்டிற்கு முன்பாக விஜய் குறுகிய கால சுற்றுலாவாக வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் (Vijay Abroad)
சென்னை விமான நிலையத்தில் டிக்கெட்டுடன் வந்த விஜய்யின் புகைப்படம், வீடியோ வைரலாகிறது.
விஜய் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த பிறகு மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.
ஒவ்வொரு நடிகரும் படப்பிடிப்பு முடிந்த பிறகு வெளிநாட்டிற்கு புறப்பட்டுச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி65 (Thalapathy65)
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தளபதி65 படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
மாஸ்டர் படம் திரைக்கு வந்த பிறகு தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.