Vijay Sethupathi Uppena Poster; விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் உப்பெனா படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உப்பெனா படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி தொடர்ந்து எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கச்சிதமாக நடிக்கக் கூடியவர். மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகிறார். ஹீரோ, சிறப்புத் தோற்றம், வில்லன், திருநங்கை, வயதான தோற்றம் என்று கலக்கி வருகிறார்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது.
சீதக்காதி படத்தில் வயதான ஒரு ரோலில் நடித்தார். இதே போன்று விக்ரம் வேதா, பேட்ட படங்களில் வில்லனாக நடித்தார்.
தொடர்ந்து இந்தப் படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு வில்லன் பட வாய்ப்பு குவிந்து வருகிறது.
பேட்ட படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இதே போன்று தெலுங்கு சினிமாவில் உருவாகி வரும் உப்பெனா என்ற படத்தில் வில்லனாகவே நடித்துள்ளார்.
பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படம் உப்பெனா. இந்தப் படத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த நிலையில், உப்பெனா படத்தில் ஹீரோயினான கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், வில்லனாகவும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதுவும், ரயனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
ஏற்கனவே உப்பெனா படத்தில் இடம்பெற்றுள்ள விஜய் சேதுபதியின் தோற்றம் வெளியாகியிருந்த நிலையில், தற்போது வில்லனுக்கே உரிய கம்பீரமான, கெத்தான, மாஸான தோற்றம் கொண்ட புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில், சிகரெட் பிடித்தபடி நாற்காலியில் அமர்ந்து கொண்டு கால்மேல் கால்போட்டு இருப்பது போன்று இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி படம் என்பதால், தமிழிலும் இந்தப் படம் டப் செய்யப்பட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.