Home மருத்துவம் சிறுநீரகத்தில் கல் உண்டாவதைத் தடுக்கும் உணவு முறை

சிறுநீரகத்தில் கல் உண்டாவதைத் தடுக்கும் உணவு முறை

571
0
சிறுநீரகத்தில் கல்

சிறுநீரகத்தில் கல் உண்டாவதைத் தடுக்கும் உணவு முறை

தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் ஏனென்றால் அதிகமாக நீரை பருகி சிறுநீரை வெளியேற்றுவதன் மூலம் சிறுநீரகத்தில் கல் உருவாவது தடுக்கப்படும்.

முடிந்த வரை உப்பைக் குறைத்து பயன்படுத்தவும், சோடியம் அதிகமாக இருக்கும் எந்த ஒரு உணவையும் பயன்படுத்த வேண்டாம். அதிக உப்பு கல் உருவாவதற்கு காரணம்.

அதிக கால்சியம் சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கால்சியம் தொடர்பான கல் உருவாவதை குறைக்கலாம்.

ஆக்சலேட் அல்லது ஆக்சாலிக் ஆசிட் கொண்ட ஸ்பினாச், ஸ்ட்ராபெரி, வீட் பிரான், டீ, சாக்கலேட் போன்ற உணவுகளை தவிர்ப்பது மேலும் நல்லது. இதன் மூலம் சிறுநீரில் ஆக்சலேட்டை குறைக்க இயலும்.

நாம் எடுத்துக்கொள்ளும் விட்டமின் சியை நம் உடல் ஆக்சலேட் ஆக மாற்றும். இதனால் கல் உருவாக வாய்ப்பு உள்ளது. நீங்கள் அதிகமாக விட்டமின், மினேர்ல்ஸ்  எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகவும்.

சர்க்கரையும் அதிகமாக எடுத்துக் கொண்டால் அதுவும் கால்சியம் அல்லது ஆக்சலேட் கற்களை உண்டாக்கும். இதனால் சர்க்கரையையும் குறைத்து பயன்படுத்துவது நல்லது.

முடிந்த அளவு உடலில் சோடியம், கால்சியமைக் குறைப்பதன் மூலம் கல் உருவாவதை எளிதாகக் குறைக்கலாம்.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஒரு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் விதமாக இந்த கட்டுரை எழிதியுள்ளோம்.

Previous articleவீட்டைச் சுற்றி 100 ஆணுறைகள்; என் மகன் நல்லவன் என திருநாவுக்கரசு தாய் தொடர் முழக்கம்
Next articleபை(π)-யைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்: உலக π தினம்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here