Home திரைவிமர்சனம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – திரைவிமர்சனம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – திரைவிமர்சனம்

477
1

தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கிய திரைப்படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

துல்கர் சல்மான், ரக்ஷன், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன், கௌதம் மேனன் நடித்துள்ளனர்.

அண்டோ ஜோசப் பிலிம் கம்பனி மற்றும் வைகோம் 18 மோஷன் கம்பெனி இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு கே.எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் ஆரம்பமாகும் போது முதல் பத்து நிமிடங்களில் பொறுமையை சோதித்து ஏன் இந்த படத்திற்கு வந்தோம் என்று நினைக்க தோன்றும்.

பிறகு படத்தின் கதைகள் நகர நகர நாம் சீட்டின் நுனிக்கே வந்து விடும் அளவிற்கு சஸ்பென்ஸாக செல்கிறது.

எதிர்பாராத திருப்பங்களுடன் அடுத்து நாம் நினைப்பது போல் இல்லாமல் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்துள்ளது இந்த படம்.

வழக்கம்போல துல்கர் சல்மான் நடிப்பில் எதார்த்தத்தை புகுத்தி நம்மை ரசிக்க வைக்கிறார்.

நடிகருடன் கூடவே வரும் ரக்ஷன் சிறுசிறு காமெடி வசனங்கள் மற்றும் பாடல் போட்டு பதில் சொல்லும் நம் சிரிப்பை மட்டுமில்ல கைதட்டல்களை அள்ளுகிறார்.

இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமே நடிகையும் அவரது தோழியும் மிகவும் அருமையாகவும், திறமையாகவும், அழகாகவும் நடித்துள்ளார்.

ரிது வர்மா மற்றும் அவருக்குத் தோழியாக வரும் இயக்குனர் அகத்தியன் மகளான நிரஞ்சனி அகத்தியன் நேர்த்தியாக நடித்துள்ளார்.

போலீசாக வரும் கௌதம் மேனன் சில காட்சிகளில் அவரது படத்தில் வரும் நடிகர்களை அவர் நடிப்பில் நாம் காணலாம்.

இவர் வரும் காட்சிகள் அனைத்தும் மாஸ் ஆகவும் உள்ளது, இறுதியில் இவர்தான் படத்தின் பைனல் டச் என்று கூட சொல்லலாம்.

படத்தின் விறுவிறுப்பு முதல் பாதியில் ஆரம்பித்து இரண்டாம் பாதி இறுதிவரைக்கும் நம்மளை கொண்டுவந்தது இயக்குனரின் திறமை என்று கூட சொல்லலாம். இவர் அறிமுக இயக்குனர் என்று சொன்னால் நம்பமுடியாத அளவிற்கு இயக்கியுள்ளார்.

படத்தை அழகாகவும், வண்ணமயமாகவும் ஒளிப்பதிவு செய்த கே எம் பாஸ்கரனை நாம் கொண்டாடிய ஆக வேண்டும்.

படத்தில் பல லாஜிக் இல்லாவிட்டாலும் அதை நாம் யோசிக்க கூட முடியாத அளவிற்கு அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்தது பாராட்டத்தக்கது.

ரக்ஷன் அறிமுகம் படம் என்றாலும், தனியார் தொலைக்காட்சியில் பரிச்சயமான முகம் என்பதாலே இவர் சிவரஞ்சினி உடன் செய்யும் காமெடி அனைத்தும் நன்றாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் முக்கியமான ஒன்று பின்னணி இசை தான், ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இந்த படத்துக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

தேவையான இடத்தில் மட்டும் இசையை அதிகப்படுத்தி, கதைக் களத்துக்கு ஏற்றது போல் தன் வேலையைக் கச்சிதமாக செய்திருக்கிறார்.

படத்தின் முதல் பாடல் நம்மளை சோதித்தாலும், அடுத்தடுத்து வரும் பாடல்கள் அனைத்தும் கதையோடு ரசிக்கும்படி உள்ளது.

இந்த படத்திற்கு முக்கியமான மூன்று பேர் துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் இந்த கதாபாத்திரத்தை மூவரும் தேர்ந்தெடுத்து நடித்தது இவர்களின் சிறப்பு.

இந்த படம் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஒரு முறையாவது திரையரங்கு சென்று பார்க்கும் அளவிற்கு உள்ளது.

குறிப்பு : கதை கேட்காமல் சென்றால் படம் சுவாரசியமாக இருக்கும்.

Kannum kannum kollaiyadithal movie review

Previous articleமாஸ்டர் இரண்டாவது சிங்கிள் அப்டேட் இதோ!
Next articleசாவித்திரிபாய் புலே; இந்திய பெண்ணியத்தின் தயார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here