Home நிகழ்வுகள் இந்தியா கொரோனா பரவ காரணம் முஸ்லீம்.. முஸ்லீம்.. – அரசே சொல்ல என்ன காரணம்?

கொரோனா பரவ காரணம் முஸ்லீம்.. முஸ்லீம்.. – அரசே சொல்ல என்ன காரணம்?

887
0
நிஜாமுதீன் தர்கா

தமிழகத்தில் கொரோனா பரப்பியது முஸ்லீம்? – அரசே சொல்ல என்ன காரணம். ஈரோட்டில் கொரானா தீவிரமாக பரவ காரணம் என்ன? nizamuddin dargah delhi

நிஜாமுதீன் தர்கா nizamuddin dargah delhi

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் தர்காவில் கடந்த மாதம் உலக அளவிலான முஸ்லீம்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் இருந்து மட்டும் 1000 மேற்பட்டவர்கள் பங்கு கொண்டுள்ளனர். இந்த மாநாட்டிற்கு தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த ஒரு குழு கொரோனா வைரசை பரப்பியுள்ளது.

அவர்கள் மூலம் இந்த வைரஸ் அங்கு இருந்த அனைவருக்கும் பரவி உள்ளது. மொத்தம் 8 நாட்கள் இந்த மாநாடு நடைபெற்று உள்ளது.

அரசு கவனக்குறைவு

சீனாவில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் இப்படி ஒரு மாநாட்டிற்கு அரசு அனுமதி ஏன் வழங்கியது. அனுமதி வழங்கிய பின்பாவது அவர்களை அங்கேயே எச்சரிக்கை செய்து இருக்கலாம்.

இந்த மாநாடு நடந்த நேரத்தில் டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் பல போராட்டம் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை மாநாடு நடத்த அனுமதி வழங்கப்படமால் இருந்து இருந்தால் கொரானா பரவலை பல்வேறு மாநிலங்களில் சமூக பரவலாக மாறாமல் தடுத்து இருக்கலாம்.

அதேநேரம் அனுமதி மறுக்கப்பட்டால் முஸ்லீம்களை பாஜக ஒடுக்க நினைக்கிறது என அதற்கும் ஒரு போராட்டம் வெடித்தாலும் வெடித்து இருக்கும்.

இப்படி கண்டும் காணமல் இருந்த அரசு இன்று முஸ்லீம்களை மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம் உள்ளது.

அவர்கள் தெரிந்தே இதை எப்படி செய்து இருக்க முடியும். தெரிந்தே இப்படி செய்தால் அவர்கள் ஏன் நேராக அவர்கள் வீட்டில் தங்கி அவர்களை சார்ந்தவர்களுக்கும் பரப்பிவிட வேண்டும்.

எனவே அரசு நேரடியாக முஸ்லீம்கள் என குறிப்பிடுவது மக்கள் மத்தியில் இஸ்லாமியர்கள் என்றாலே கொரோனா பாதித்தவர்கள் என்பதுபோல் ஆகிவிடும்.

இங்கு இருதரப்பினர் மீதுமே தவறு உள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் கூட கொரோனா வந்தாலும் பரவாயில்லை போராடுவோம் எனக்கூறியதும் கண்டிக்கதக்க ஒன்றே.

இந்த கொரோனா பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஈரோடு மக்களே. இன்று அவர்கள் யாருக்கெல்லாம் கொரோனா பரவியது எனத் தெரியாமல் உயிர் பயத்தில் உள்ளனர்.

Previous articleToday Breaking News Tamil | இன்றைய முக்கிய செய்திகள் 01.04.2020
Next articleசூரியின் கமகமக்கும் பிரியாணியை காரி துப்பிய அவரது மனைவி!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here