ஸ்கின் டாக்டர் மற்றும் நடிகருமான சேதுராமன் நேற்று இரவு திடீரென இறந்து விட்டதாக தகவல் வெளியாகியவுடன் இது கொரோனா வைரஸ் காரணமோ என அதிர்ச்சியடைந்தனர்.
ஸ்கின் டாக்டர் சேதுராமன் திரையுலக பிரபலங்களுக்கு தோல் சிகிச்சை அளிப்பவர். இதன் மூலம் திரையுலகினர் இவருக்கு அறிமுகமானார்கள்.
சந்தனத்துடன் நெருக்கம் ஏற்பட்டது. இதன்மூலம் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 ஆகிய படங்களில் நடித்தார்.
நேற்று இரவு சென்னையில் உள்ள வீட்டில் அவர் திடிரென நெஞ்சைப் பிடித்தபடி கீழே விழுந்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நூரையீரல், இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.
உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு ஸ்டோக் ஏற்பட்டது தெரியவந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இரவு 8:30 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 37 தான் ஆகிறது. 2016-ல் உமையாள் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒரு மகள் இருக்கிறார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு தான் கொரோனா வைரஸ் குறித்து ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுத்து வந்தார். மிகவும் துடிப்புடன் காணப்பட்டார்.
வயது 37, உடல் வாகு மிகவும் ஒல்லி, இவருக்கு எப்படி ஹார்ட் அட்டாக் வந்தது என செய்தியைக் கேட்ட அனைவருமே அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் வந்தால் நான் ஒன்று இறந்துவிடமாட்டேன் என அவர் கொடுத்த பேட்டியில் கூறிவிட்டு இப்போது ஹார்ட் அட்டாக்கில் இறந்தது சற்று அதிர்ச்சியைத்தான் கொடுக்கிறது.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் இறந்துள்ளதால் அவருக்கு நேரில் சென்றுகூட அஞ்சலி செலுத்த முடியாமல் பிரபலங்கள் ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
I miss u sethu anna