சென்னை/மும்பை: மராட்டியம் மற்றும் தமிழகத்தில் கொரோனா தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு மே 31 வரை நீடிக்க அதிக வாய்ப்பு. தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் இந்த ஊரடங்கு அறிவிக்கப்படும் என தெரிகிறது.
மராட்டியம்
மராட்டியத்தின் சிகப்பு மண்டலங்களாக கருதப்படும் மும்பை, பூனே, மாலெகோன் மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் ஆகிய பகுதிகளில் மிகவும் கண்டிப்புடன் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.
மேற்கூறிய பகுதிகளில் தான் அதிக கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கிற்கான அறிவிப்பு இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை சில முக்கிய அமைச்சர்களை கூட்டி மே 17க்கு பிறகு கடைபிடிக்கப்படும் ஊரடங்கிற்கான திட்டத்தை வகுக்கும் படி தெரிவித்தார். பிறகு அத்திட்டம் வெள்ளி கிழமை பிரதமர் மோடியின் அனுமதி பெற அனுப்பப்படும் என தெரிவித்தர். வரும் காலங்களில் சிகப்பு மண்டலங்களில் ஊரடங்கு மிகவும்கண்டிப்புடன் மராட்டியத்தில் கடைபிடிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு நியமித்த நிபுனர்குழு, எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு படிப் படியாக ஊரடங்கை தளர்த்தும் படி அறிவுறுத்தியது மேலும் அதிக கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டால் நோய்பரவுதல் குறித்து அதிகமாக அறியலாம் என அறிவுறுத்தியது.
நம்பத்தகுந்த தகவல்களின் படி தமிழ்நாட்டில் ஊரடங்கு நீடிக்கப்பட்டால் பொது போக்குவரத்து, உடற் பயிர்ச்சி கூடம், வணிக வளாகம், திரை அரங்கம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு திறக்க அனுமதி இருக்காது என தெரிகிறது.
“தொழிற்கூடங்கள் இன்னும் அதிக தளர்வுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்படும், அரசு அலுவலகங்களில் 50% பணியாட்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாறி மாறி அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் வாரத்தில் 6 வேலை நாட்கள் கடைபிடிக்கப்படும்,” என செய்திகள் தெரிவிக்கின்றன.