ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தமிழக வீரர் மரணம் அடைந்தார். இவர் இந்திய துணை ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார் என்பது கூப்பிடத்தக்கது.
இந்தியா: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் நேற்று முன்தினம் தீவிரவாதிகளுடனான சண்டையில் தமிழ்நாட்டை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகர் என்பவர் வீர மரணம் அடைந்தார்.
இவர் தென்காசி அடுத்த செங்கோட்டை பகுதியை சேர்ந்த மூன்றுவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர். இவரது மறைவால் இந்த பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. சந்திரசேகருக்கு வயது 31.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்களைக் கண்ட தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 3 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வீரர்களில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மூன்றுவாய்க்கால் பகுதியை சேர்ந்த சந்திர சேகரும் ஒருவர். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நெல்லையை சேர்ந்த நம் தமிழக வீரர் திரு.சந்திரசேகர் அவர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்.
இந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். திரு.சந்திரசேகர் அவர்களின் பிரிவால் மீளாத்துயரில் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.
இவரது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி உடனடியாக வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் நாட்டை காக்கும் பணியில் தனது இன்னுயிரை தியாகம் செய்த திரு.சந்திரசேகரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அரசு சார்பில் மரியாதை செலுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் உடனடியாக அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்ட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா இடத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையின்போது ராணுவ மேஜர், கர்னல் உள்பட 5 பேர் வீர மரணம் அடைந்தனர்.