சந்திர கிரகணம்: இத மட்டும் செய்துவிடாதீர்கள்!
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவியல் கூறுகிறது. அதேவேளை சந்திரகிரகணம் நடைபெறும் நாளில், கதிர்வீச்சுகள் வீரியமாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரங்கள் சந்திர கிரகணத்தின்போது, என்ன செய்யவேண்டும். என்ன செய்யக்கூடாது என சிலவற்றை அறிவுறுத்தியுள்ளது.
கிரகணத்தை கண்களால் பார்க்கக் கூடாது
எந்த கிரகணம் ஏற்பட்டாலும், அதைப் பார்க்கக்கூடாது என்பதே நம் மரபு. சந்திர கிரகணத்தின்போது, மனிதனின் மனதுக்கும் உடலுக்கும் கேடுவிளைவிக்க கூடும் என இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளதாம்.
எப்போது சாப்பிட வேண்டும்
கிரகண நேரத்தில், சந்திரனின் கதிர் வீச்சு பூமியில் விழும். இதனால் அந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது.
கிரகணத்திற்கு முன்பே சாப்பிட வேண்டும் அல்லது கிரகணம் முடிந்தபின்பு சாப்பிட வேண்டும்.
கிரகணம் நடைபெறும்போது, உணவு உள்ள பாத்திரத்தில் சிறிது அருகம்புல்லை வைப்பது வழக்கம். இதனால் கிரகணத்தினால் உணவு பாதிக்கப்படாமல் இருக்கும்.
வெளியில் தலைகாட்டக்கூடாது
மனநலம் பாதிப்புக்குள்ளனவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்பட்டோர், கன்னிப்பெண்கள் கிரகணத்தின்போது வெளியில் தலைகாட்டாமல் இருப்பது நல்லது.
தவிர்க்க முடியாத காரணத்திற்காக வெளியே செல்ல நேரிட்டால், ஒரு சிறிய துணியில் நெல் அல்லது அரிசியை முடிந்துகொண்டு செல்லுங்கள். கிரகணம் முடிந்ததும் அதை ஆற்றிலோ கிணற்றிலோ கொட்டிவிட வேண்டும்.
வழிபாடு
கிரகணம் நடைபெறும்போது வழிபாடு செய்வதை தவிர்க்கவேண்டும். கோவில்களை கிரகத்தின்போது அடைத்தே வைத்திருப்பார்கள். வீட்டிலும் பூஜை செய்யாமல் இருப்பது நல்லது.
உடலுறவு கொள்ளக்கூடாது
கிரகண நேரத்தில் உடலுறவு கொண்டு கருவுற்றால், அக்குழந்தை குடும்பத்திற்கு ஆகாதாம். எனவே தம்பதிகள் கிரகண நேரத்தில் பிரிந்திருப்பது நல்லது.
சந்திரகிரணம் என்றால் என்ன? எப்படி உருவாகிறது? சூப்பர் மூன் என ஏன் அழைக்கப்படுகிறது?