ஹிப்னாஸிஸ் – ஹிப்னோசிஸ் (அறிதுயில் நிலை) என்பது வசியக்கலையா?
அறிதுயில் நிலை (Hypnosis) என்பது மனதின் ஆழ்ந்த ஓய்வு நிலை ஆகும். அறிதுயில் நிலையை பொதுவாக தன்னுணர்வு அற்ற நிலை அல்லது ஆழ்ந்த உறக்கம் என்று எண்ணுகிறார்கள். அது தவறு.
அறிதுயில் நிலையில் மனம் மிகவும் விழிப்பாக இருக்கும். அறிதுயில் வல்லுநர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், முறையான மற்றும் தெளிவான பதில்களை அளிக்க மனம் தயாராக இருக்கும்.
மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு அதிகம் சினம் கொள்பவர்கள், அதிகம் பதட்டமடைபவர்கள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க நினைப்பவர்கள் இந்த சிகிச்சை மூலம் பயனடைவார்கள்.
அறிதுயில் நிலைக்குக் கொண்டு செல்லும் முறை
ஊசல் குண்டு, ஸ்பைரல் ரோல் வரைபடம், ட்ரக்ஸ் கொண்டு ஒருவரின் மனதை ஒருநிலைப்படுத்தி அரிதுயில் நிலைக்குக் கொண்டு செல்லமுடியும்.
அந்நியன் படத்தில், விக்ரமை நாசர் ஒரு ஸ்பைரல் வரைபடத்தைப் பார்க்க வைத்து, ஆழ்மனதில் உள்ள நிகழ்வுகளை வெளிக்கொண்டு வருவார்.
இப்படித்தான் ஹிப்னோசிச வல்லுனர்களும் ஒருவரின் மனதை ஒருநிலைப்படுத்தி ஹிப்னோசிச நிலையை அடையவைக்கின்றனர்.
அனுபவம் வாயந்தவர்களால் மட்டுமே இதைச் செய்யமுடியும். அனைவராலும் ஒருவரை அறிதுயில் நிலையை அடையவைக்க முடியாது.
ஒருவரின் விருப்பமில்லாமல் ஹிப்னோசிசம் செய்ய முடியுமா?
ஒருவருடைய விருப்பமில்லாமல் அவரை, அறிதுயில் நிலைக்குக் கொண்டுசெல்வது கடினம். முடியாமலும் போகலாம்.
நரசிம்மா படத்தில் விஜயகாந்திடம் நடிகர் ராஜசேகர், உங்கள் ஆழ்மனதுக்குள் செல்லப்போகிறேன் எனக்கூறுவார். ரொம்ப ஆழத்திற்கு போகாத மூழ்கி செத்துடுவ என பதிலுக்கு விஜயகாந்த் கூறுவார்.
உண்மை கண்டறியும் சோதனை
குற்றவாளிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும்போது, ட்ரக்ஸ் கொடுத்து உண்மைகளை வரவழைக்க முயற்சி நடக்கும்.
அவர்களுடைய மனவலிமையைப் பொருத்து, அறிதுயில் நிலையை அடையாமல் தவிர்க்கமுடியும் அல்லது போலியாக நடிக்க முடியும்.
ஆனால், பலர் மனப்பதற்றத்தால் அறிதுயில் நிலைக்குச் சென்று மாட்டிக்கொள்வார்கள். குழந்தைகளை எளிதாக அறிதுயில் நிலைக்கு கொண்டு செல்ல இயலும்.
அறிதுயில் நிலையின் மர்மங்கள் (myths)
அறிதுயில் நிலையிலிருந்து விழித்தெழும்போது, நடந்த விஷயங்கள் நியாபகம் இருக்காது என்பது தவறான கருத்து. ஒருசில நிகழ்வுகளைத் தவிர அனைத்துமே நினைவில் இருக்கும்.
மறந்துபோன நினைவுகளை, நினைவில் கொண்டு வரலாம் என்பது தவறான கருத்து. ஒருவரின் மூளையில் பதிந்திருக்கும் நினைவுகளை மட்டுமே வெளிக்கொண்டு வரமுடியும்.
அறிதுயில் நிலைக்குச் செல்லுபவர்களுக்கு, உடல் ரீதியான பலம் அல்லது சக்தி கிடைக்கும் என்பது தவறான கருத்து.
ஹிப்னோசிஸ் என்பது வசியக்கலையா?
ஒருவகையில் இது அப்படி போன்றதுதான். ஆனால் வசியக்கலையல்ல. ஒருவரிடம் பேச்சுக்கொடுத்து அவர்களின் மனதை ஒருநிலைப்படுத்த முடியும்.
சில சாமியார்கள் பெண்களை மயக்குவது இப்படித்தான். ஆனால் அது, அந்த இடத்துடன் முடிந்துவிடும். சுதாரித்துக்கொண்டால் எளிதில் தப்பிவிடலாம்.
வசியம் செய்பவரின் சொல்லுக்கெல்லாம் ஆடுவார்கள் என்பது தவறு. இருவரும் தனிமையில் இருக்கும்போது மட்டுமே நிகழ்த்த முடியும்.
பேய், சாத்தான் எனக்கூறி ஒருவித பயத்தை ஏற்படுத்தி தங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட வைப்பதே போலிச் சாமியார்களின் போலி வித்தை.
வசிய மருந்து, வசிய மூலிகை இதெல்லாம் ஒன்றும் கிடையாது. பணம் பறிக்கும் கும்பலிடம் ஏமாற வேண்டாம்.