கொரோனா வெயிலுக்கு பரவுமா? உலக சுகாதார மையம் கூறுவது என்ன? வெப்பமான சூழ்நிலையில் கொரோனா பரவாதா? கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அதிக வெப்பநிலையில் கொரோனா வைரஸ் பரவாது என சிலர் தெரிவித்து வருகின்றனர். அது குறித்து உலக சுகாதார மையம் என்ன கூறியது என இப்பதிவில் காண்போம்.
உலகத்தில் ஒரு லட்சத்திற்கு மேலான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து உள்ளனர். இதுவரை 3500க்கும் மேற்பட்ட உயிர் பழி ஆகியுள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் எவ்வளவு பாதிப்பு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனாவை கட்டுபடுத்த இயலவில்லை.
இந்தியாவிலும் ஒரே வாரத்தில் 39 உறுதிபடுத்தப்பட்ட கொரோனா பாதிப்பாளர்கள் உள்ளனர். அனைவரையும் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வெப்பமான சூழ்நிலையில் கொரோனா பரவாதா?
உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி டெட்ராஸ், வெப்பமான சூழ்நிலையில் இந்த வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை.
ஆகையால் இந்தச் சூழலில் பயம் கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவதே முக்கியம்’ என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி டெட்ராஸ் இதுகுறித்துப் பேசும்போது, “உலகம் முழுக்க எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி நோய் இப்போது பரவி வருகிறது.
ஆகவே மக்கள் அனைவரும், நோயின் தீவிரத்தன்மையை புரிந்துகொண்டு, புத்திசாலித்தனமாக நோயை எதிர்த்து நிற்பது மட்டுமே இப்போது அவசியமாக இருக்கிறது.
கரோனா வைரஸ் என்றால் என்ன? – Coronavirus Tamil
பருவநிலை வெப்பமான சூழ்நிலையில் இந்த வைரஸ் பரவாது என்பது இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை அதனால் அலட்சியத்தோடு செயல்பட்டு நோய்ப் பரவுதலுக்கு வழிவகுத்துவிட வேண்டாம்.
சென்னையைச் சேர்ந்த தொற்றுநோயியல் மருத்துவர் ராமசுப்ரமணியத்திடம் இது குறித்து கூறுகையில், கொரோனா மட்டுமில்ல எந்த ஒரு வைரஸும் வெப்பம், குளிர், மிதமான சூழல் என எதைப் பொறுத்தும் வைரஸின் தீவிரம் அதிகரிக்கவோ குறையவோ செய்வதில்லை.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஹேண்ட் வாஷ், சோப் போன்றவற்றில் ஏதேனுமொன்றின் மூலம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கைகழுவிக் கொண்டே இருங்கள்.
அடுத்ததாக, சுயசுத்தம் மிக முக்கியம், இருமல், தும்மலின்போது மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளுங்கள்.
Corona Virus – கரோனா வைரஸ் – ஆபத்தானதா?