Home நிகழ்வுகள் இந்தியா மராட்டியத்தில் 96 காவலர்களுக்கு தொற்றியது கொரோனா

மராட்டியத்தில் 96 காவலர்களுக்கு தொற்றியது கொரோனா

338
0
96 காவலர்களை தாக்கியது கொரோனா வைரஸ்

மும்பை: மராட்டியத்தில் இதுவரை 96 காவலர்களுக்கு தொற்றியது கொரோனா வைரஸ் , இதில் 15 அதிகாரிகளும் அடங்குவார்கள். சனிக்கிழமை வரையிலான ஊரடங்கில் பணியாற்றியவர்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“மராட்டியத்தில் இதுவரை 96 காவலர்கள், 15 காவல் அதிகாரிகள் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது”, என அவர் தெரிவித்தார்.

அந்த பாதிக்கப்பட்ட காவலர்களில் 3 அதிகாரிகள் மற்றும் 4 காவலர்கள் ஆகியோர் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டனர் மற்றுமல்லாது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர், என்று அவர் தெரிவித்தார்.

14,955 மக்கள் கைது

மேலும அந்த அதிகாரி 69,374 விதிமீறல்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் 188 இன் கீழ் பதிவு செய்யப்பட்டதாகவும் மற்றும் 14,955 பேர் இந்த ஊரடங்கு சமயத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்

“இதில் 147 முறை காவலர்கள் மேல் தாக்குதல்கள் நடத்தபட்டிருப்பதாகவும் அதன் அடிப்படையில் 477 பேர் கைது செய்யப்பட்டிருப்பதும் நடந்துள்ளது. மொத்தம் 602 பேர் ஊரடங்கை மீறியது தொடர்பாக கண்கானிக்கப்பட்டு மீண்டும் தனிமை படுத்தப்பட்டனர்”, என அவர் தெரிவித்தார்.

47,168 வாகனங்கள் பறிமுதல்

மேலும் அவர் 1,084 வழக்குகள் சட்டத்தை மீறி போக்குவரத்தில் ஈடு பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் 47,168 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது, மற்றும் ரூ. 2.63 கோடி மதிப்பிலான அபராதங்கள் விதிக்கப்பட்டது, என அவர் தெரிவித்தார்.

கொரோனா சம்மந்தமாக மொத்தம் 77,670 சந்தேகங்கள் கேள்விகளாக கட்டுப்பாட்டு மையங்களில் கேட்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

3 வார நீண்ட நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 24 இரவு முதல் கடைபிடிக்கப்பட்டு, பிறகு மே 3 வரை அது நீடிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Previous article26/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleTHALABDayCarnivalBegins: தொடங்கியது தல அஜித்தின் பர்த்டே கார்னிவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here