Home நிகழ்வுகள் இந்தியா ஒரே நாளில் 10,664 புதிய கொரோனா நோய் தொற்றுகள்

ஒரே நாளில் 10,664 புதிய கொரோனா நோய் தொற்றுகள்

304
0
ஒரே நாளில் 10,664 புதிய கொரோனா நோய் தொற்றுகள்

ஒரே நாளில் 10,664 புதிய கொரோனா நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேர நிலவரப்படி புதிதாக 10,664 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரேநாளில் 380 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 3,43,091 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 9,900 பேர் இதுவரை நோய் தொற்றிற்கு பலியாகியுள்ளனர்.

நாட்டில் அதிகப்படியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,10,744 தமிழகத்தில் 46,504, டெல்லி 42,829, குஜராத் 24,055 ராஜஸ்தான் 12,981, மத்திய பிரதேசம் 10935, மேற்குவங்கம் 11494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் அதிகப்படியாக கொரோனா நோய் தொற்று பாதித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மகாராஷ்டிரா 4,128 குஜராத் 1,505 டெல்லி 1,400 உ.பி 399, மேற்குவங்கம் 485,

மத்திய பிரதேசம் 465, தமிழகம் 479 ஆக உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 1,80,013 நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்த தகவல்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here