அவுரங்காபாத்: வெள்ளிக்கிழமை இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் 16 பேர் ஜல்னா பகுதியில் இருந்து 36 கிமீ நடந்து வந்த அசதியின் காரணமாக சிறிது நேரம் தண்டவாளத்தில் படுத்து உறங்கினர் அந்த நேரம் வந்த சரக்கு இரயில் எதிர்பாராதவிதமாக அவர்கள் மேல் ஏரியது இதில் சம்பவ இடத்திலேயே 16 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மொத்தம் 20 பேர்
மொத்தம் 20 பேர் ஜல்னா பகுதியில் இருந்து 160 கிமீ தொலைவு உள்ள புவசாவால் இரயில் நிலையத்திற்கு செல்வதற்காக நடை பயணமாக வந்தனர் என்றும் மீதம் 4 பேர் எப்படியோ இரயில் வருவதை அறிந்து தப்பிவிட்டனர் எனவும், கண் இமைக்கும் நேரத்தில் இச்சம்பவம் நடந்தேரிவிட்டதாக மீதம் இருந்த 4 பேரும் தெரிவித்தனர்.
மேலும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவிக்கையில் “ நாங்கள் வெகுதூரம் நடந்து வந்ததால் தண்ணீர் குடித்து சிறிது ஓய்வெடுக்க தண்டவளத்தில் அமர்ந்தோம், இரயில் அந்நேரம் அங்கு ஓடாது என்று எண்ணி அப்படியே சிறிது நேரம் தூங்கவும் செய்தோம், பிறகு சிறிது நேரத்தில் இரயிலில் அடிபட்டவர்களின் அலறல் சத்தம் கேட்டு நாங்கள் நான்கு பேர் மட்டும் பக்கத்தில் தாவி எப்படியோ தப்பிவிட்டோம்,” என உயிர் பிழைத்தவர்களில் சாஜன்சிங்க் துருவ் என்பவர் தெரிவித்தார்.
இறந்த 16 பேரின் உடல்களும் அவுரங்காபாத் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
5,00,000 நிவாரணம்
இந்த துயரச்சம்பவத்தை அடுத்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இறந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ₹.5,00,000 நிவாரணத்தொகை அறிவித்தார்.
அந்த 20 தொழிலாளர்களும் வேலை செய்து வந்த ஸ்டீல் ஆலை தற்போதுதான் 40 நாட்கள் ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஜல்னா பகுதியின் ஆட்சியர் ரவிந்ர பின்வாடே தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மராட்டியத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் இரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.