பெங்களூரு : செவ்வாய் கிழமை கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கர்நாடகத்திற்கு மேலும் தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும் மற்றும் கர்நாடகாவிற்கு கொரோனா ஊரடங்கு தேவை இல்லை என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்தார்.
கர்நாடகாவிற்கு கொரோனா ஊரடங்கு தேவை இல்லை
“கர்நாடகத்திற்கு ஊரடங்கு தேவையில்லை, எங்களுக்கு மேலும் தளர்வுகள் அளிக்கப்பட வேண்டும்,” என பிரதமர் நரேந்திர மோடியுடனான காணொளி காட்சி உரையாடளில் எடியூரப்பா தெரிவிக்கப்போவதாக அறிவிப்பு.
செய்தியாளர்கள் சந்திப்பில்
செய்தியாளர்கள் சந்திப்பில், “ நான் பிரதமரிடம் மக்கள் வழக்கமான வாழ்கையை தொடரவும் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவும் நடவடிக்கை தேவை என கோரிக்கை வைப்பேன்.” என தெரிவித்தார்.
கர்நாடகத்தில் மெட்ரோ தொடர்வண்டி, திரைஅரங்கங்கள், நீச்சல் குளம், போன்றவைகள் இன்னும் மூடிய நிலையில் உள்ளது.
முதல் மந்திரிகளுடன் காணொளி காட்சி
பிரதமர் மோடி பல்வேறு மாநில முதல் மந்திரிகளுடன் காணொளி காட்சியில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பங்கு பெற இருக்கிறார்.
கொரோனாவுக்கு எதிராக நாங்கள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளோம்
“கொரோனாவுக்கு எதிராக நாங்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் மற்றும் நாம் அனைவரும் சேர்ந்து கொரோனாவை எதிர்கொண்டு வெல்வோம்,” என எடியூரப்பா தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு பொருளாதார உதவிகள் வழங்க ஏற்பாடு
மேலும் அரசு கர்நாடக மாநில விவசாயிகளுக்கு பொருளாதார உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கொரோனாவிற்கு எதிராக நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.