Home நிகழ்வுகள் இந்தியா ஒரே நாளில் தமிழகத்தில் 2,396 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் தமிழகத்தில் 2,396 பேருக்கு கொரோனா

297
0
ஒரே நாளில் தமிழகத்தில் 2,396 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் தமிழகத்தில் 2,396 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை 56,845 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 2,396 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1,254 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 32,186 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 38 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

நேற்று புதிதாக உறுதியான 2,396 பேரில் 2,332 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 64 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பியவர்கள்.

இதுவரை 704 பேர் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். நேற்று செங்கல்பட்டில் 180 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 87 பேருக்கும், மதுரையில் 90 பேருக்கும், ராமநாதபுரத்தில் 48 பேருக்கும்,

ராணிப்பேட்டையில் 67 பேருக்கும், திருவள்ளூரில் 131 பேருக்கும், திருவண்ணாமலையில் 125 பேருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தையும் நேற்று சுகாதாரத்துறை தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

Previous articleசென்னையில் இருந்து கோவை வந்த 30 ஊழியர்களை பரிசோதனையின்றி பணியில் சேர்த்ததால் ஜுவல்லரிக்கு சீல்: கோவை
Next articleதந்தையின் அன்புக்கு இணையில்லை இவ்வுலகில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here