2ஜி இணைய சேவை மே 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஜம்மு-காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. 3ஜி, 4ஜி சேவைகள் தற்போதைக்கு கிடையாது.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 2ஜி இணைய சேவை மே 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று திங்கள்கிழமை அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புதிய பயங்கரவாத அமைப்புகளைத் தொடங்குவதன் மூலம் பயங்கரவாத வன்முறையில் ஈடுபடுவதற்கு முயற்சிகளை பாகிஸ்தான் செய்து வருகிறது.
மேலும், பயங்கரவாத அணிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்கும், ஊடுருவல் முயற்சிகளுக்கும் பாகிஸ்தான் முயல்கிறது. இவற்றை செயல்படுத்த இந்த அமைப்புகள் அதிவேக இணையத்தை பெரிதும் சார்ந்துள்ளன.
எனவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என உள்துறை முதன்மை செயலாளர் ஷலீன் கப்ரா அவரது ஆணையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இணைய சேவைகளை தவறாகப் பயன்படுத்துவது, வன்முறை நடவடிக்கைகளுக்கும் பொது ஒழுங்கை சீர்குலைப்பதற்கும் வழிவகுக்கும்.
மேலும் உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிசெய்து இணைய அணுகலுக்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலேயே இது வரை அத்தகைய செயல்கள் காட்டுக்குள் உள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
இதனால் குடிமக்கள் மோசமாக பாதிக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் இணையம் தடைசெய்யப்பட்டது.
இதனால் யூனியன் பிரதேசம் முழுவதும் ஒரு கட்டமாக மீட்டெடுக்கப்பட்டது. இருப்பினும், அதிவேக மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.