Home நிகழ்வுகள் இந்தியா டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

273
0
டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

டெல்லியில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நில அதிர்வு மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுடில்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதனால சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலா அதிர்வு ஹரியானா மாநிலம் ரோதக் வரையில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வினாடிகள் வரை நீடித்த இந்த   நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்து குலுங்கின.

இந்த அதிர்வு உணரப்பட்டவுடன் மக்கள் அலறியபடி வீதிகளில் வந்து கத்த துவங்கினர். இந்திய நேரப்படி நேற்று மாலை 9.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

டெல்லியிலிருந்து ரோதக் 65 மைல் தொலைவில் உள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

என்னுடைய படுக்கை, டேபிள், பேன், ஆகியவை அதிர்நடத்தை உணர்ந்தோம். 7-8 வினாடிகள் நீடித்தது இந்த நிலநடுக்கம். என குர்கானை சேர்ந்த குணால் ஓபராய் தெரிவித்துள்ளார்.

Previous articleதமிழகத்தில் நேற்று 874 பேருக்கு கொரோனா உறுதி
Next article“பொன்மகள் வந்தாள்” – ஒரு பார்வை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here