Home நிகழ்வுகள் இந்தியா அசாமில் வெள்ள அபாயம் நீடிப்பு, 60,000 த்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

அசாமில் வெள்ள அபாயம் நீடிப்பு, 60,000 த்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

அசாமில் வெள்ளம் அபாயம்

குவாகத்தி: ஞாயிற்றுக்கிழமை அசாமில் வெள்ளம் அபாயம் நீடிப்பதாகவும் 6 மாவட்டங்களில் உள்ள 60,000 த்திற்கும் அதிகமான மக்கள் இந்த பேரிடரினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ள நீர் புகுந்தது

லஷ்மிபூர் மாவட்டத்தில் வெள்ள நீர் வடிந்திருந்தாலும் மற்ற மாவட்டங்களான தேமாஜி மற்றும் மேற்கு கர்பி அங்கலாங்க் ஆகியவற்றில் வெள்ள நீர் புகுந்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

அசாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை அதிகார மையம்(ASDMA) வெளியிட்டுள்ள வெள்ள நிலவரத்தின் படி அன்று மட்டும் 59,840 பேர் தேமாஜி, கோல்புரா, நாகோன், ஹோஜை, மேற்கு கர்பி அங்கலாங்க் மற்றும் சாச்சர் ஆகிய மாவட்டங்கலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோல்புரா மாவட்டத்தில் அதிகபட்ச பாதிப்பு

கோல்புரா மாவட்டத்தில் அதிகபட்சமாக 42,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அதை தொடர்ந்து ஹோஜை மாவட்டத்தில் 13,000 த்திற்கும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் மேற்கு கர்பி அங்கலாங்க் மாவட்டத்தில் 3,000 பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிகிறது.

தற்போது வரை அசாமில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 என தெரிவிக்கப்படுகிறது.

6,439 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் நாசம்

தற்போது 103 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் மற்றும் 6,439 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்து உள்ளதாகவும் தெரிகிறது.

அதிகாரிகளால் 11 நிவாரன முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் மற்றும் 1.727 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாநிலத்தின் வெள்ளம் பாதித்த பல பகுதிகளில் சாலை மற்றும் கட்டுமானங்கள் பாதிப்படைந்து உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleயாரும் நம்பாதீங்க: திருமணம் பற்றி சிம்புவின் பெற்றோர் அறிக்கை!
Next articleநடிகை மேக்னா ராஜின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here