Home நிகழ்வுகள் இந்தியா மருத்துவமனை அலட்சியம்: 1 மாதத்தில் 77 குழந்தைகள் பலி

மருத்துவமனை அலட்சியம்: 1 மாதத்தில் 77 குழந்தைகள் பலி

347
0
மருத்துவமனை அலட்சியம் குற்றச் சம்பவங்கள்

மருத்துவமனை அலட்சியம்: இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் பிஞ்சுக் குழந்தைகள் கொத்தாக இறந்துபோவது தொடர்கதையாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜேகே லோன் மருத்துவமனையில் 1 மாதத்தில் 77 குழந்தைகள் பலியாகி உள்ளது.

இந்தியாவில் மிகப் பெரியது மருத்துவத்துறை. அதிலும் இந்தியா முழுவதும் அரசு மருத்துவமனைகள் ஏராளமாய் உள்ளது.

குற்றச் சம்பவங்கள்

தனியார் மருத்துவமனைகள் பல சிறப்பாக தரமாக செயல்பட்டாலும், அங்கே கட்டணங்கள் அதிகம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் ஏழைகளின் மருத்துவமனையாக செயல்படுவது அரசு மருத்துவமனைகளே! இங்கு வருபவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களே என்பதால், பல குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

செவிலியர்கள் அலட்சியம்

அரசு மருத்துவமனைகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் மிகவும் கவனக் குறைவுடன் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணமே உள்ளன.

அதேவேளை சிறப்புடன் செயல்படும் அரசு மருத்துவமனைகளும் உள்ளன. நவீன வசதிகள் பல இருந்தும், ஸ்கேன் செய்ய தனியார் மையங்களுக்கே நோயாளிகள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு, தமிழகத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஹெச்.ஐ.வி. ரத்தத்தை ஏற்றியது அதிர்வலையை ஏற்படுத்தியது.

தனியார் மருத்துவமனை அலட்சியம்

அரசு மருத்துவமனையில் தான் இந்த அவலம் என்றால், தனியார் மருத்துவமனைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

தனியார் மருத்துவமனைகளிலும் பவர்கட் என பல குழந்தைகள் இறந்த சம்பவங்களும் தமிழகம் உட்பட நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது.

உண்மையில் இது விபத்தா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? எனக் கேட்டால் இந்த வழக்குகள் பெரும்பாலும் நிலுவையிலேயே உள்ளன.

ராஜஸ்தான் மருத்துவமனை

ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா மாவட்டத்தில் உள்ள ஜேகே லோன் என்ற தனியார் மருத்துவமனையில் 1 மாதத்தில் 77 குழந்தைகள் பலியாகியுள்ளது.

இதுகுறித்து அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பது ஒன்றும் புதிதல்ல.. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

விசாரணை நடத்தப்பட்டதா?

இந்தியா முழுவதும் இதுபோன்ற ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவை அனைத்தும் இன்னும் முழுமையாக விசாரணை நடத்தப்படாமலே உள்ளது.

அப்படி இருக்கும்போது இந்த வழக்கு மட்டும் முழுமையாக விசாரிக்கப்பட்டுவிடுமா? என்ற கேள்வியே எழுகிறது. இதற்கு விடை எப்போது கிடைக்கும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here