பாரதி ஏர்டெல்லின் 5% பங்குகளை வாங்குகிறது அமேசான் நிறுவனம். முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தற்போது பாரதி ஏர்டெல்லின் 5% பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
நாட்டில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்த பாரதி ஏர்டெல், தற்போது ஜியோ நிறுவனத்தின் வருகையை அடுத்து பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
தொலை தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இதனால் பாரதி ஏர்டெல் நிறுவனம் கடும் நிதி செருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலைமையை சரிசெய்ய அமேசான் நிறுவனம் முன் வந்துள்ளது.
முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் ஏர்டெல் நிறுவனத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனங்களுக்கிடையே இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமேசான் தனது ஆன்லைன் வணிக சேவையான இ-காமர்ஸ் சேவையை விரிவுபடுத்த இந்தியாவில் 49,000 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில் இந்நிறுவனம் பாரதி ஏர்டெல் பங்குகளை வாங்குவதன் மூலம் தொலை தொடர்பு துறையிலும் கால் பாதிக்கவுள்ளது.