ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று பொது மற்றும் தனியார் அலுவலக ஊழியர்களுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மே 4-முதல் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையின் அடிப்படையில் பச்சை சிகப்பு ஆரஞ்சு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டலங்களில் மேலும் சில கட்டுப்பாடுகளும் சில தளர்வுகளும் அளித்து அரசு அறிவித்துள்ளது. அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய சேது செயலி கொரோனா பற்றிய சுய பரிசோதனை செய்துகொள்ள உதவுகிறது.
மேலும் தொற்று உள்ள பகுதிகளில் உள்ளவர்களை எச்சரிக்கவும் இந்த செயலி பயன்படுகிறது. அரசு ஊரடங்கை நீட்டித்து வெளியிட்ட அரசாணையில் 33% ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பணிக்கு செல்லும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்க்காக அனைவரும் தங்கள் கைப்பேசியில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
அலுவலகங்கள் முழுவதிலும் உள்ள ஊழியர்கள் கட்டாயமாக ஆரோக்யா சேது பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக எண்ணிக்கையில் பரவு வருகிறது.
தனியார் அலுவலகங்கள் தேவைக்கேற்ப 33% ஊழியர்களுடன் செயல்படலாம். மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அலுவலகங்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஊழியர்களின் பாதுகாப்பை தொழிச்சாலைகள் உறுதி செய்யும் வண்ணம் அனைத்து ஏற்படுகளையும் செய்த பின்னரே தொழிற்ச்சாலைகளை திறக்க வேன்டும். ஊழியர்கள் வந்து செல்வதற்கு பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்..
அனைத்து அரசு அலுவலகங்களும் துணை செயலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த அதிகாரிகளுடன் முழுமையாக செயல்படும் மீதமுள்ள ஊழியர்கள் தேவைக்கேற்ப 33% வரை பணியாற்றலாம்.
அலுவலகங்கள் தொடங்குவதற்கு முன், அவர்கள் ‘ஆரோக்யா சேது’ இல் தங்கள் நிலையை மதிப்பாய்வு செய்து, பயன்பாடு ‘பாதுகாப்பானது’ அல்லது ‘குறைந்த ஆபத்து’ என்ற நிலையைக் காண்பிக்கும் போது மட்டுமே பயணிக்க வேண்டும்.
ப்ளூடூத் மூலம் தகவல்களை தெரிவிக்கும் இந்த ஆரோக்கிய சேது செயலி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சேகரித்து எச்சரிக்கிறது.
எனவே இந்த செயலி அனைத்து மக்களின் கைப்பேசியில் இருக்கவேண்டிய மிக அத்தியாவசியமான செயலியாகும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்த செயலி முக்கிய பங்கு வகிக்கிறது.