Home நிகழ்வுகள் இந்தியா பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது; ஜெயலலிதாவிற்கு இல்லை?

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது; ஜெயலலிதாவிற்கு இல்லை?

378
0
பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது: ஜெயலிதாவிற்கு இல்லை?

இந்திய அரசின் மிக உயரிய விருது பாரத ரத்னா விருது. இந்த விருதை பல அரசியல் தலைவர்கள் பெற்றுள்ளனர்.

இந்த வருடத்தில் மொத்தம் மூன்று நபர்களுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவராக பதவி வகித்த பிரனாப் முகர்ஜி, நானாஜி தேஷ்முக், பூபேன் அசாரிகா ஆகிய மூவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். மேலும் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பதவியும் வகித்துள்ளார்.

மறைந்த நானாஜி தேஷ்முக் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியை நிறுவியவர்களில் ஒருவராவார்.

பூபேன் அசாரிகா அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

இவர்கள் மூவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

எப்போது வழங்கப்படுகிறது என தேதி குறிப்பிடப்படவில்லை. இன்னும் சில வாரங்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தியது.

ஆனால், விருது பட்டியலில் அவர் பெயர் இல்லை. ஜெயலலிதாவை குற்றவாளியாகக் கருத முடியாது என சமீபத்தில் தான் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Previous articleபப்ஜிக்குத் தடை: விரக்தியடைந்த அடிமைகள்!
Next articleஹன்சிகா லீக்ஸ்: வீடியோ எடுத்த அந்த நபர் இவரா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here