Home நிகழ்வுகள் இந்தியா மணிப்பூரில் கவிழப்போகிறதா பா.ஜ.க அரசு?

மணிப்பூரில் கவிழப்போகிறதா பா.ஜ.க அரசு?

341
0
மணிப்பூரில் கவிழப்போகிறதா பா.ஜ.க அரசு?

மணிப்பூரில் கவிழப்போகிறதா பா.ஜ.க அரசு? மணிப்பூரில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கூறியுள்ளது. இதனால் அங்கு பா.ஜ.க அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

கவுஹாத்தி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. இதனால் அங்கு பா.ஜ.க கட்சியின் அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது.

மணிப்பூர் சட்டமன்றம் மொத்தமாக 60 உறுப்பினர்களை கொண்டது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில் 21 எம்.எல்.ஏ-க்களை பெற்றிருந்த பா.ஜ.க கட்சி சிறுகட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியிலிருந்து ப்ரென் சிங் முதல்வராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.

தற்போது பா.ஜ.க-விற்கு அளித்துவந்த ஆதரவை 9 எம்.எல்.ஏக்கள் திரும்ப பெற்றுள்ளனர். இதனை அடுத்து 28 எம்.எல்.ஏக்களுடன் காங்கிரஸ் சுயேச்சை மற்றும் சிறு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

மேலும் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கோன்ராட் சங்மா காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இக்கட்சியின் எம்.எல்.ஏக்களும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.எஃப் அல்லது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயரிடப்பட்டுள்ள இந்த அணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஒரு எம்.எல்.ஏ உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டணிக்கு முன்னர் மமுதல்வர் ஓக்ரம் இபோதி சிங் தலைவராக இருந்து, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கூறியுள்ளார். விரைவில் சட்டமன்றத்தை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் கோரியுள்ளார்.

இதனால் தற்போது அங்கு ஆளும் பா.ஜ.க அரசு தனது பதவியர் பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓக்ரம் இபோதி சிங், பா.ஜ.க, எஸ்.பி.எஃப், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, கவுஹாத்தி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மணிப்பூர், manipur, today’s news, latest news, corona news, b.j.p, s.p.f, gauhathi, thinamul congress party, congress party,

Previous articleதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது
Next articleமதுரை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த காவல் துறையினருக்கு கொரோனா தொற்று

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here