விஜயவாடா: லாரி ஓட்டுநர் ஒருவர் நேரத்தை கடத்த நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் சீட்டு கட்டு விளையாடியதால், அதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த 24 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்ப்பட்டது, இதை கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் இம்தியாஸ் சனிக்கிழமை தெரிவித்தார்.
வேறு சில பேர் குழுவாக அமர்ந்து நேரத்தை கடத்துவதர்காக வேறு ஒரு லாரி ஓட்டுனருடன் அமர்ந்து சீட்டு விளையாடினர் இதனால் விஜயவாடாவின் மற்றொரு பகுதியிலும் 15 பேருக்கு வைரஸ் பரவ காரணமாக அமைந்தது.
இந்த இரண்டு நிகழ்வுகளையும் சேர்த்து மொத்தமாக 40 பேருக்கு கடந்த இரு நாட்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது, என அவர் தெரிவித்தார்.
கிருஷ்ணா லங்கா எனும் இடத்தில் ஒரு லாரி ஓட்டுநர் நேரத்தை கடத்துவதற்காக நண்பர்களுடனும், அக்கம் பக்கத்தினருடனும் சீட்டு கட்டு விளையாடி உள்ளார் மேலும் அங்கிருந்த பெண்கள் தாயம் விளையாடி உள்ளனர்.
இதனால், கொரோனா வைரஸ் 24 நபர்களுக்கும் பரவியது, என அவர் கூறினார்.
இதைபோலவே கார்மிகா நகர் என்னும் இடத்திலும் ஒரு லாரி ஓட்டுநரால் 15 பேருக்கு கொரோனா பரவல் நடந்துள்ளது.
விஜயவாடா தற்போது முக்கிய கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக உள்ளது இங்கு மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பாதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியின் ஒரு பகுதியாகிய விஜயவாடாவில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 25ந்து புதிய கொரோனா பாதிப்பாளர்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் கொரோனா பரவலை தடுக்க கண்டிப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்க மக்களை அறிவுறுத்தினார்.