ஒரு பக்கம் ஏலம்; மறுபக்கம் ஓலம் என இந்திய மாநிலங்கள் குடியுரிமை சட்ட மசோதாவால் பற்றி எரிந்து கொண்டு உள்ளது.
ஐபிஎல் 2020 போட்டிகளுக்கான வீரர்கள் கொல்கத்தாவில் ஏலம் விடப்பட்டு வருகின்றனர். கோடிகளை கொட்டி வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர் ஐபிஎல் அணி நிர்வாகிகள்.
அதேவேளையில், உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவில் 4 மீடியா வாகனம், 3 பேருந்து, 10 கார்கள், இருசக்கரவாகனங்கள் 10 என தீயில் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் தடை அமலில் உள்ள நிலையில் லக்னோவில் போராட்டம் வெடித்தது.
இப்போராட்டத்தின்போது 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகியது. நகரமே தீ பிழம்பாக காட்சியளித்துள்ளது.
கோராக்பூரில் தடையை மீறி சமாஜ்வாடி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாரணாசியிலும் தடையை மீறி போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதுகுறித்து உத்திரப்பிரதேச டி.ஜி.பி. ஓபி சிங் கூறியதாவது, லக்னோ, வாரணாசி, அலிகார் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.